Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஏப்., 7ல் துவங்குது, 'தினமலர்' வழிகாட்டி! : புத்தம் புது படிப்புகள், நுழைவு தேர்வு தகவல்கள் ஏராளம்

இளைய சமுதாயத்தினரின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ்மற்றும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இணைந்து வழங்கும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 7 முதல்,9ம்தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின், உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு காணும் களமாக,'தினமலர்' நாளிதழ், 'வழிகாட்டி' நிகழ்ச்சி திகழ்வது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியில், வேலை வழங்கும், 'டாப்' துறைகள், அதற்கான படிப்புகள், தேவைப்படும் திறன்கள் உட்பட, ஏராளமான தகவல்கள் வழங்கப்படுகின்றன.மருத்துவம், மருத்துவ அறிவியல், இன்ஜினியரிங், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், சி.ஏ., - ஐ.சி.டபுள்யூ.ஏ., - ஏ.சி.எஸ்., உள்ளிட்ட துறைகள், பல்வேறு படிப்புகள், கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை, அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள் நேரடியாக வழங்குகின்றனர்.இவை தவிர, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி,சோஷியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிக் டேட்டா, டேட்டா அனாலிட்டிக்ஸ், ரோபாட்டிக்ஸ் போன்ற வளர்ந்துவரும் பிரிவுகள் குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.குறிப்பிட்ட சில முக்கிய தொழில்நுட்ப துறைகளில், செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

நிபுணர்கள் : மருத்துவ படிப்பு படிக்க, கட்டாயம் எழுதவேண்டிய, 'நீட்' தேர்வை அணுகும் முறை குறித்தும், அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், பிரபல கல்வி ஆலோசகர்கள் ஜெயப்பிரகாஷ் காந்தி, நெடுஞ்செழியன், மாறன் ஆகியோர் பங்கேற்று, பல அரிய கல்வித் தகவல்களை வழங்க உள்ளனர். சி.ஏ., படிப்புகள் குறித்து, ஆடிட்டர் சேகர், சைபர் செக்யூரிட்டி மற்றும்டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து கிருபா சங்கர், கல்விக் கடன் குறித்து வங்கி அதிகாரி விருதாசலம், வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்கள் குறித்து சுஜித்குமார், மேலாண்மைத் துறை படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர்தில்லைராஜன், சட்டத்துறை குறித்து சத்யகுமார் உட்பட, பல துறை சார்ந்த நிபுணர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர்.

அரங்குகள் : நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாக, கல்வி நிறுவனங்களின், 'ஸ்டால்'களும் இடம் பெறுகின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர் கருத்தரங்கில் பங்கேற்றுநிபுணர்களின், விளக்கங்களை பெறுவதோடு மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் நேரடியாககலந்துரையாடி, தெளிவு பெறலாம்.

'ஸ்பான்சர்'கள் : 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், ஸ்பான்சர்களாக, கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் மற்றும், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ் ஆப் ஏவியேசன், முகமது சதக் ஏ.ஜே. காலேஜ் ஆப் இன்ஜினியரிங், நியு பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி போன்ற கல்வி நிறுவனங்களும், இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன.

'டேப்' மற்றும், 'வாட்ச்' பரிசு : தினமும், காலை, 10:00 முதல் மாலை, 7:00 மணி வரை நடைபெறும், இந்த கல்வித் திருவிழாவில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும், உறவினர்களும் இலவசமாக பங்கேற்கலாம். ஏராளமான கல்வித் தகவல்கள் அடங்கிய வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கருத்தரங்க அமர்விலும் பங்கேற்று, கேட்கப்படும் பொது அறிவு கேள்விகளுக்கு, சரியான பதில் அளிக்கும் மாணவர்களுக்கு, 'டேப்' மற்றும் 'ரிஸ்ட் வாட்ச்' உடனுக்குடன் பரிசாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives