விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க 'ஜாக்டோ' முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2018

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க 'ஜாக்டோ' முடிவு

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டம் நடத்த 'ஜாக்டோ' உயர்மட்டக் குழு முடிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன், துணைதலைவர் அய்யாகண்ணு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் கூறியதாவது:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகை வழங்கவும், 2004-2006ல் நியமித்த தொகுப்பூதியஆசிரியர்களை பணி முறைப்படுத்தவும் வலியுறுத்தி மாவட்ட, மாநில தலைநகரங்களில் மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை அரசு கோரிக்கையை நிறைவேற்றவில்லை.நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த 'ஜாக்டோ' உயர்மட்ட குழுவில் கோரிக்கை நிறைவேறாததை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள 79 விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன் மறியல் நடத்துவது என்றும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியினை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம், என்றனர்.

கூட்டத்தில் தமிழக தமிழாசிரியர் கழக சிறப்புதலைவர் ஆறுமுகம்,தலைமையாசிரியர் கழக தலைவர் பீட்டர்ராஜா, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 'விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடாத தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்மறியலில் ஈடுபடுவார்கள், என தெரிவித்தார்.

5 comments:

  1. Replies
    1. Enda Nonna paya Seenu goya unaku enda gaandu

      Delete
  2. I have B.Ed with 2 U.G.( Bsc maths and Bsc Botony). I need G.o for B.ed is common for all degree. send any one G.O no. Mail id bharathiraja97@gmail.com

    ReplyDelete
  3. Thanks for sharing great post. Keep on moving! health tips

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி