'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2018

'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால், வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.
பிளஸ் 2 வகுப்பில், கணிதமும், அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்றுடன் தேர்வு முடிந்தது. பொது தேர்வுக்கு முன், 100 மையங்களில், ஒரு மாதமாக, நீட் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தேர்வு முடிந்ததால், மீண்டும் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.அதன்படி, தமிழக அரசின், 412 பயிற்சி மையங்களில், வரும், 5ம் தேதி முதல், பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.

இந்த வகுப்புகளை, சிறப்பு பயிற்சி பெற்ற, 150 அரசு பள்ளி ஆசிரியர்கள் நடத்த உள்ளனர்.இதற்கிடையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும், 9,000 மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 4,000 பேருக்கு, தமிழக அரசின் சார்பில், உணவு, இருப்பிட வசதியுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சென்னையில், அண்ணா பல்கலை, ஆர்.எம்.கே. இன்ஜி., கல்லுாரி, செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்டவற்றில், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள், வரும், 9ம் தேதி துவங்க உள்ளன.வேறு எந்த மாநிலத்திலும், நீட் தேர்வுக்காக, அரசின் சார்பில் பயிற்சி வழங்கப்படாத நிலையில், தமிழகத்தில் தான் முதன்முதலாக, கட்டணமின்றி, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி