காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2018

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கம்!


காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கதை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பெற்றுத்தந்துள்ளதோடு புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 21ஆவது காமன்வெல்த் போட்டிகள் இன்று முதல் நடைபெற்று வருகின்றன. போட்டியின் முதல் நாளான இன்று இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 48 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 178கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையையும் படைத்துள்ளார் சானு. இதுதான் இந்தத் தொடரில் இந்தியா வெல்லும் முதல் தங்கம் ஆகும்.முன்னதாக நடந்த ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் குருராஜா சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்திய அணி இந்த காமன்வெல்த் தொடரில் பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். மொத்தமாக 249 கிலோ எடையைத் தூக்கிய குருராஜா கடைசி சுற்றில் சற்றே தடுமாறியதால் முதல் பரிசினை இழந்தார்.

மலேசியாவைச் சேர்ந்த முஹமது இஸ்ஹார் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.மேலும், பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி அடங்கிய இந்திய ஜோடி இலங்கை அணியை 21-12, 21-14 என்ற நேர் செட்களில் வீழ்த்தி உள்ளது. அதேபோல் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின்சாய்னா நேவால் 21-8, 21-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி