காமன்வெல்த் போட்டி : பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று அசத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2018

காமன்வெல்த் போட்டி : பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று அசத்தல்


காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்.
77 கிலோ பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து வீரர் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் 3-வது இடத்தையும் பிடித்தது. காமன்வெல்த் போட்டியில் இதுவரை 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. சதீஷ்குமார் ஸ்காட்லாந்தில் 2014-ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் மகிழ்ச்சி

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமார் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததால் பெற்றோர்கள் மகிழச்சியடைந்துள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் டி.வி.யில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர் மகிழச்சியடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அப்பகுதி மக்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

12 comments:

  1. தினமலர்
    ஏப்ரல்்7
    2013ம் ஆண்டு டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு பரிசீலனை
    *அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    ReplyDelete
  2. வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் - பெருமை தமிழனே

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே,உன்னால் இந்த தமிழ்நாடே பெருமைப்படுகிறது.

    ReplyDelete
  5. தமிழனின் பெருமையை உலகறியச் செய்த சதீஷ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்துகள்

    ReplyDelete
  6. வழக்கு போட்டால் எல்லாம் முடிந்து விடுமா.... அரசு ஒரு முடிவுக்கு வரட்டும்.... பாதிப்பு அனைவருக்குமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி