எஸ்.சி, எஸ்.டி சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2018

எஸ்.சி, எஸ்.டி சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

எஸ்.சி, எஸ்.டி சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவர் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தில் பல உயிரிழந்தனர். பல்வேறு பொருட்சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. எஸ்.சி, எஸ்.டி சட்டத்தை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி.க்கு சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி