அங்கீகாரம் அளிப்பதில் அலட்சியமா? சி.பி.எஸ்.இ.,க்கு கடும் கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2018

அங்கீகாரம் அளிப்பதில் அலட்சியமா? சி.பி.எஸ்.இ.,க்கு கடும் கண்டனம்

பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்திய,மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின்செயலை, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், கடுமையாககண்டித்து உள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கானஅங்கீகாரத்தை, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வழங்கிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூனுக்குள், இதற்கானவிண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.இதுதொடர்பான பரிசீலனை, ஆய்வுகளை, ஆறு மாதத்திற்குள்முடித்துவிட வேண்டும் என்பது விதி.கடந்தாண்டு, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வேண்டி, 203 பள்ளிகள்விண்ணப்பித்து இருந்தன; இவற்றில், 140 பள்ளிகளுக்குஅங்கீகாரம் வழங்கப்பட்டது. அவற்றில், 19 பள்ளிகளுக்குமட்டும், ஆறு மாதத்திற்குள் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மீதமுள்ள பள்ளிகளுக்கு, மிகவும் தாமதமாக அங்கீகாரம்வழங்கப்பட்டதாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்குதணிக்கை அலுவலகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 58 பள்ளிகள், இடைநிலை மற்றும் மேல்நிலைவகுப்புகளுக்கான அங்கீகார உயர்வுக்கு விண்ணப்பித்துஇருந்தன.

இந்த பள்ளிகளில், அந்த வகுப்புகள் செயல்படத்துவங்கிய பின், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்கி உள்ளது.மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில்,சி.பி.எஸ்.இ., அலட்சியம் காட்டி வருவதாகவும், சி.ஏ.ஜி.,கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி