சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2018

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.
சிறப்பு ஆசிரியர் தேர்வு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதன் முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தனர். அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளாளபாளையம் பிரிவில் நின்றிருந்தனர்.

பேச்சுவார்த்தை இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும்படியும் அங்கு வந்து நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர். காலை 7 மணி அளவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மண்டபத்திற்குசென்று அவர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்தனர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 அடுத்த மாதம்

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் கூறும்போது, “அடுத்த மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நேர்மையான முறையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை” என்றார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

19 comments:

  1. YEANDA 2013 LA TET PSS PANNUNAVAGALUKKU POSTING PODALAYA UGGALUKKU RESULT VANTHA YENNA VARALANA YENNA THIRUTHHUGADA MANA KETTAVAGA

    ReplyDelete
    Replies
    1. பொதுவெளியில் ஒரு ஆசிரியர் எப்படி பேசவேண்டும் என்றுகூட தெரியாமல் உளறுகிறீர்கள். 2013 - இல் நீங்கள் எழுதியது தகுதித் தேர்வு நாங்கள் இப்பொழுது எழுதி இருப்பது காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு என்பதை மறந்து விடாதீர்கள். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. TET 2013 மற்றும் 2017 - இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை கிடைக்கும்.

      Delete
    2. Sir...I get 61+ 5 marks in drawing trb. Is any chance to get the job.

      Delete
    3. வரும் ஆனா வராது...

      Delete
    4. Devanesan jacob sir...Thank u for yr motivation.

      Delete
  2. 2013 க்கு 13000 காலிப்பணியிடங்கள் நிரப்பபட்டது....மறந்து விடாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. No just joke 😁😁😁😁

      Delete
    2. எங்களுக்கு ஐந்து வருடம் தேர்வே வைக்கல கண்ணா

      Delete
  3. Election timela kalil koda vizhuvanga.

    ReplyDelete
  4. நான் டெட் தேர்வு பற்றி சொல்கிறேன்..... புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள்.... சிறப்பு ஆசிரியர் தேர்வு போட்டி தேர்வு என்று தெரியாமல் இருக்குமா.....

    ReplyDelete
  5. 2013 ல் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 13000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.வேண்டும் என்றால் www.trb.tn.nic.in என்ற வலைத்தளத்தில் சென்று கீழே கட்டத்தில் உள்ள
    Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 மற்றும்
    Direct Recruitment of B.T Assistant 2012-2013 click செய்து பார்க்கவும்..ஆனால் 2017 தேர்வர்களுக்கு இதுவரை எவ்வித தகவலும் வர வில்லை நாம் கேட்பது g.o 71 அடிப்படையில் வேலை வேண்டும் என்றே!!! அனைவரும் திரள்வோம் ஏப்ரல் 23

    ReplyDelete
  6. Mooditu irunkga da avangala oru mudiyu solvanga

    ReplyDelete
  7. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்

    ReplyDelete
  8. 2019 la MP & MLA election searnthu vaikka poranga, inimel nallathu nadakkum

    ReplyDelete
  9. மற்ற மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடம் நடத்த வேண்டும்.இதனால் தமிழாசிரியர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்

    ReplyDelete
  10. விளையாட்டு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி