தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் கடம்பூர் ராஜு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2018

தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் கடம்பூர் ராஜு

‘தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்’ என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா சாதனை நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.

அப்போது, அவர் கூறியதாவது: மனதினையும், உடலினையும் ஒருநிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவுவது யோகாதான். அதனை உணர்ந்ததால் தான் நாடே யோகாவினை நாடி செல்லும் நிலை உள்ளது.

மனதிற்கும், உடலுக்கும் நல்ல பயிற்சியாக உள்ள யோகாவினை ஒரு இயக்கமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

தமிழக பாடத்திட்டத்தில் யோகா விரைவில் ஒரு பாடமாக சேர்க்கப்படும்.  யோகா பயிற்சி அளிக்க அனைத்துப் பள்ளிகளிலும் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார் கடம்பூர் ராஜு.

9 comments:

  1. Education Minister haa eppo change pannanga? Apdiye tet Kim posting podupa samy

    ReplyDelete
  2. முதலில் அமைச்சர்களுக்கு சொல்லித் தரனும் யோகா.

    ReplyDelete
  3. Neet,bt,computer teachers ah podavaeee ungalala poda mudiyala....???idhula vera yoga padaththai kondu vandhu,appuram yoga teacherai poda poranungalammm.... namma enga poi muttikkirathu.. indha mathiri minister ah select pannathukku.education velaiya vera evano pakkiran..wt happening there...????

    ReplyDelete
  4. அமைச்சர் கடம்பூா் ராஜி அவா்களே எப்போ கல்வி அமைச்சரா மாற்றம் பெற்றீர்

    ReplyDelete
  5. டிசம்பர்ல இருந்து செங்கோட்டையன் பணிநியமன அறிவிப்பு செய்துட்டே இருந்து பட்டைநாமம் போட்டார் இப்ப கடம்பூர் ராஜுவா குட் காமினேஷன் ஆசிரியர்களின் மனவேதனையை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா??????


    ReplyDelete
    Replies
    1. அடுத்ததாக சூரப்பா சொல்லுவாரு...

      Delete
  6. டேய் ராஜ லிங்கம்.... உண்ணாவிரதம் என்றுசொன்னாய்... பசிக்கும் என்று போராட்டத்தை மாற்றி விட்டாயா..... கூஜா லிங்கம் நிர்வாண போராட்டம் நடுத்துவேன் என உனது குரூபில் சொன்னாய்..... இதெல்லாம் பொய்யா டக்லஸ் ராஜாலிங்கம

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி