கல்வி : கானல் நீராய்... - கா.பிரதீப் ப .ஆ . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2018

கல்வி : கானல் நீராய்... - கா.பிரதீப் ப .ஆ .

அரசு கல்விச்சாலைகள் மூடப்படும் போது கல்வியின் உரிமைகள் இழக்கபடுகிறது ...

என் அப்பா சொல்லி கேட்டது..

நான் படிக்கும் போது டவுனில் உள்ள அந்த குறிப்பிட்ட பள்ளி மட்டும் இருந்தது . 10 கி.மீ. சுற்று வட்டாரத்திற்கு மாணவர்கள் நடந்தே போயிட்டு படிப்போம்.

அப்போது வந்த காமராசர் ஐயாவும் கக்கன் ஐயாவும் கட்டியது தான் நீ நம்ம ஊர்ல படிக்குற பள்ளி என பிரமிப்புடன் சொன்ன நாட்கள் மனதளவில் அசை போடுகிறது.

அந்த வறுமையின் பிடியிலும் கல்வியை தரமாக இலவசமாக தர வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வை தான் - குலத்தொழில்களை கடந்து அனைவரும் சம தராசில் பயணிக்க காரணமானது.

சுதந்திர இந்தியாவின் பயணத்தில் கல்வி வணிகமானது கடந்த 15 ஆண்டுகளில் மட்டுமே.

காரணம் விழிப்புணர்வு அற்ற பெற்றோரின் ஆசை.

அந்த பள்ளியில் படிக்கனும். டாக்டர் ஆகனும். என் தலையை அடமானம் வைத்தாவது படிக்க வைக்கனும். இது தவறில்லை எனினும் 14 லட்சம் பேரும் டாக்டராக மெஷின்களை மட்டுமே உருவாக்கவில்லை நாம்.

எந்த துறைக்கு சென்றாலும் பிடித்து ரசித்து புரிந்து செய்தால் வெற்றி பெறுவது நிதர்சனம்.

ஆனால் இங்கு கல்வியும் பாதையும் பல்வகை பாதையை மூடிவிட்டு ஒரு வழி பாதையில் பயணிக்கிறது.

இதன் வர்த்தகம் இன்று மூலை முடுக்கெல்லாம் நீட் சென்டர் .
அரசு பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளி அதிக உருவாக்கம் .

அவற்றின் ஈர்ப்பு உக்திகள். அரசு பள்ளிகள் மூடல் .இதனை இன்று  கண்டும் காணாமல் செல்லும் நாம் அடுத்த தலைமுறைக்கு இலவச கல்வியே இல்லாமல் செய்ய போகிறோம்.

இதன் விளைவுகள் நாளை உலகம் அறியும். வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்
3% கல்வி வரியை தனிப்பட்டு செலுத்துகிறோம்.

குறைகளை களைந்து நிறைவான இலவச அரசு பாடகசாலைகளை கேட்பது நம் கடமையும் உரிமையும் தானே.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு- சிறிது சிறிதாக முறைபடுத்தி நவீன உக்திகளுடன் பழைய கலைகளை உள்ளடக்கிய  கல்வி பகிர்ந்தாலே உலகிலே சிறந்த கல்வியை நாம் தர இயலும்.

வாழ்வில் பல்திறன் மிக்க தன்னம்பிக்கையில் கூடுதல் வலுபெற்ற மாணவர்கள் அரசு பள்ளிகள் உருவாக்கி வருவது நிதர்சனம்.

வேலைவாய்ப்பு இழப்பதை விட கல்வி வாய்ப்பு இழக்கும் அந்த சில குழந்தைகளுக்காக - இந்த பதிவு

வலியுடன் - அரசுப்பள்ளி முன்னாள் மாணவன்

4 comments:

  1. ஆமாம்.இந்த21ம் நூற்றாண்டில் கல்வித்துறையில் ஆட்சியாளர்கள் செய்த மாற்றம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒழுக்கத்திலும்,நன்னெறியிலும்,கடமையுணர்விலும்,தலைகுனியச்செய்துள்ளது

    ReplyDelete
  2. Makkal anaivarum ondraga enainthu porattam nadatha vendum kalvi enbathu government kita mattum than erukanum nu apothu than indha mari situations varadhu

    ReplyDelete
  3. மாற்றத்தை முதலில் நாம் கொண்டுவர வேண்டும், அரசு ஆசிரியர்களாவது தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும், பிறகு பொது மக்கள் தானாகவே அங்கு வருவர், பணம் இருப்பவர் தங்கள் பிள்ளைகளை வசதியான பள்ளிகளில் சேர்க்கும்பொழுது இல்லாதவர்கள் கூட கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி