தனித் தேர்வர்களும் நீட் எழுத அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2018

தனித் தேர்வர்களும் நீட் எழுத அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் நீட் எழுதுவதை தடை செய்யக் கூடாது என சி பி எஸ் ஈ க்குடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆகிஉள்ளது. கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி அன்று நீட் தேர்வு குறித்த அறிவிப்பை சி பி எஸ் ஈ வெளியிட்டது. அதில் தனித் தேர்வர்களாக 12 ஆம் வகுப்பு தேறியோர், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களை இரண்டு வருடங்களுக்கு மேல் படித்தவர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு எழுத விண்ணப்பிக்க தகுதி இல்லாதோர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து 13 மாணவர்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் வழக்கு மனுவில், "நாங்கள் தனித் தேர்வர்களாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளோம், நாங்களும் மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்க தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது. இதற்கானபதிலை அளிக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு சி பி எஸ் ஈ மற்றும் மருத்துவக் கவுன்சிலை கேட்டுக் கொண்டது. அதையொட்டி அந்த துறைகள் அளித்த பதிலை நீதிமன்ற அமர்வு பரிசீலித்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.உயர் நீதிமன்ற அமர்வு "சி பி எஸ் ஈ யின் இந்த உத்தரவு தவறானது.

 தனித் தேர்வர்களாக இருப்பினும் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தாலும், அறிவிக்கப் பட்ட வயது வரம்புக்குள் இருந்தாலும் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது. அவர்களையும் நீட்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என சி பி எஸ் ஈ க்கு உத்தரவிட்டுள்ளது.

3 comments:

  1. தொடர்பு கொள்ளவும்

    மதுரை மாவட்டம் நிலக்காட்டையை சார்ந்த சகோதிரி பெமிலா ( உயர்நீதி மன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்து நீதியரசர் திரு. ராஜா அவர்கள் 2013 TET தேர்ச்சி பெற்றோருக்கு சலுகை மதிப்பெண் வழங்க கடந்த வருடம் பரிசீலித்ததுதொடர்பாக). உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

    ம. இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    8778229465

    சு. வடிவேல் சுந்தர்
    மாநில தலைவர்
    8012776142

    ReplyDelete
  2. 2013 க்கு பின் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காமல் 4 வருடங்கள் பாதிக்கப்பட்டு பின் 2017 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் சலுகை மதிப்பெண் கோரினால் அவர்களுக்கும் அது பொருந்தும்.... 2017 இல் இதை வைத்து எவரேனும் வழக்கு தோடுத்தால் அவர்களுக்கும் இது சலுகை வளங்கப்படும்..... நேரத்தை வீணடிக்காமல் படிங்க....

    ReplyDelete
  3. அய்யோ கூஜா லிங்கம் சென்னை கெளம்பிட்டார்... ஏப்ரல்23 தமிழ்நாடே அலற போகுது..... டக்லஸ் ராஜலிங்கம்..... இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது..... அடித்த வசூல் வேட்டை க்கு கூஜா லிங்கம் தயார் அகிட்டார்...... பிச்சை எடுக்கும் போராட்டம்,,, முள் மேல் படுத்து போராட்டம்.... காமெடி பீஸ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி