திருமணம், சுற்றுலா, ஆன்மிக பயணத்தின் போது ரயிலில் முன்பதிவு இருக்கைகளை பிறருக்கு மாற்றுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2018

திருமணம், சுற்றுலா, ஆன்மிக பயணத்தின் போது ரயிலில் முன்பதிவு இருக்கைகளை பிறருக்கு மாற்றுவது எப்படி?

ரயிலில் கிடைக்கும் சவுகரியங்களை கருத்தில் கொண்டு பெரும்பாலான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். இதனால், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக பொங்கல்,
தீபாவளி, கிறிஸ்துமஸ், கோடை விடுமுறை போன்ற காலங்களில் ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்து பயணிப்பது என்பது தற்போது குதிரை கொம்பாக மாறி வருகிறது. இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் முன்று மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு பயணம் நெருங்கும் போது முன்பதிவு செய்த நபருக்கு பதில் அவரது குடும்பத்தை சேர்ந்த வேறு ஒரு நபர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை  ஏற்பட்டால் நிலைமை எப்படி இருக்கும்?. ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை வைத்து புதிய நபரால் பயணிக்க முடியாது.

சரி, இந்த டிக்கெட்டை ரத்து செய்து விட்டு புது டிக்கெட் எடுக்கலாம் என்றால் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காது. ஆனால், தற்போது முன்பதிவு இருக்கைகளை பிறருக்கு மாற்றும் விதத்தில் ரயில்வே நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதியின் படி முன்பதிவு செய்யப்பட்ட பயணி தன் இருக்கையை வேறு ஒரு நபருக்கு மாற்றித்தர முடியும். முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முதன்மை முன்பதிவு  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மட்டுமே இந்த வசதியை பயணிகள் செய்ய முடியும். அதன்படி, மத்திய, மாநில அரசு அலுவலர்கள் அரசு பணி நிமித்தம் ரயிலில் பயணம் செய்தால் முன்பதிவு இருக்கையை மாற்றம் செய்ய முடியும்.

இவ்வாறு மாற்றம் செய்ய ரயில் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரியின் அத்தாட்சி கடிதத்தை கொடுத்து பயணசீட்டில் பெயரை மாற்றி வேறு நபர் பயணம் செய்ய முடியும். குடும்பத்தில் உள்ள நபர் முன்பதிவு செய்துவிட்டு அந்த குடும்பத்தில் உள்ள ரத்த உறவுகள் அதாவது அப்பா, அம்மா, மகள், மகன், அண்ணன், தங்கை, கணவன், மனைவி ஆகிய நபர்களுக்கு முன்பதிவு செய்ய பயணசீட்டில் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பெயரை மாற்ற முடியும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா போன்ற ரயில் பயணங்களுக்கு ஒரு பயணி வரமுடியாத பட்சத்தில் இந்த இருக்கையை அதே கல்விநிறுவனத்தை சேர்ந்த மற்றொரு மாணவருக்கு மாற்றம் செய்ய முடியும்.

இதுவும் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக செய்ய வேண்டும். இந்த பெயர் மாற்றம் ஒரே ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். திருமணம், சுற்றுலா, ஆன்மிக பயணம் போன்று குழு பயணத்தின் போது ஒரு பயணி வரமுடியாத பட்சத்தில் அந்த பயணசீட்டை மற்றொரு பயணிக்கு ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அந்த குழுவின் தலைவரின் அத்தாட்சி கடிதத்தோடு மாற்றம் செய்ய முடியும். தேசிய மாணவர் படையின் உள்ள மாணவர்கள் குழு பயணத்தின் போது ஒரு மாணவனின் பயணசீட்டை மற்றொரு மாணவனின் பெயருக்கு அந்த குழுவில் உள்ள அதிகாரியின் கோரிக்கை கடிதத்தின் மூலமாக ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக மாற்றம் செய்ய முடியும்.

சிறிய நிலையங்களில் வசதியில்லை

ரயில் டிக்கெட் யார் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர் சென்றால் தான் டிக்கெட்டை மாற்ற முடியும். டிக்கெட்டை கொண்டு வேறு நபர்கள் சென்றால் மாற்றம் செய்ய முடியாது. சிறிய ரயில் நிலையங்களில் இந்த வசதியை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு  உள்ளதால் அவர்கள் கணிப்பொறியில் இந்த பெயர் மாற்றும் வசதி  ரயில்வேத்துறையால் மறுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. 08:03:2018
    Flash News
    2013 தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக காலந்தாழ்த்தாமல் பணிநியமன ஆணை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரு.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்
    Source news 7 channel
    Puthiyathalaimurai
    Pothigai
    Maalai murasu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி