அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் முப்பெரும்விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2018

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் முப்பெரும்விழா

திறன்வகுப்பறை(SMART CLASS) திறப்பு விழா, கணிப்பொறி அறை திறப்பு விழா ,94 வது ஆண்டுவிழா 06.04.2018

 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் முப்பெரும்விழா (திறன்வகுப்பறை திறப்பு விழா, கணிப்பொறி அறை திறப்பு விழா ,94 வது  ஆண்டுவிழா ) மிகச்சிறப்பாக நடைபெற்றது.  விழாவிற்கு பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil தலைமை வகித்தார். நம் பள்ளியின் செயலர் திரு.டி .வி .சுப்பிரமணியன்  மற்றும் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. இரா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி வரவேற்புரை ஆற்றினார் . தலைமை ஆசிரியர் திரு. ம. ராம் சந்தர்  ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் . பள்ளியின் திறன் வகுப்பறையினை(SMART CLASS)  Dr . நா. ராமசுப்பிரமணியன் -நந்தினி ராமசுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். கணிப்பொறி வகுப்பறையினை வீரவநல்லூர் அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.பாப்பாக்குடி சரக உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil தலைமையுரை ஆற்றினார் .  



























Dr . நா.ராமசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் திரு.டி .வி .சுப்பிரமணியன் , பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. இரா. மணிஅல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. M.H.M. இப்ராஹிம் ,திரு. முஹம்மது அலி ஜின்னா , திரு. ராமகிருஷ்ணன் ,, ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு .S .S . ரெங்கன் , பட்டதாரிஆசிரியர் திரு. இரா. பாலசுப்பிரமணியன் , பாப்பாக்குடி இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்தையா ராஜேந்திரன், கலிதீர்த்தான்பட்டி முத்தமிழ் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு. பரமராஜ்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களின் யோகாசனப்பயிற்சி  அனைவரையும் மகிழச்செய்தது. ஆசிரியை திருமதி. செ .ஜேஸ் மாலா  நன்றியுரை கூறினார். ஆசிரியை திருமதி. மணிமேகலை நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை எம்பள்ளியின் ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி , திருமதி .கோமதி யோகா ஆசிரியர் திரு. ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி