வினாத்தாள் சர்ச்சை : சி.பி.எஸ்.இ., விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2018

வினாத்தாள் சர்ச்சை : சி.பி.எஸ்.இ., விளக்கம்

'ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான வினாத்தாளுக்கும், பயிற்சி மைய வினாத்தாளுக்கும், எந்த தொடர்பும் கிடையாது'என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான,ஜே.இ.இ.,நுழைவுத்தேர்வு, ஏப்., 8ல், நாடு முழுவதும் நடந்தது. இதில், ஜே.இ.இ., வினாத்தாள், ஒரு தனியார் பயிற்சி மையத்தின் வினாத்தாள் போல் இருப்பதாக, தகவல்கள் பரவியுள்ளன.இது குறித்து, தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், 'சி.பி.எஸ்.இ.,யின் வழியே, துறையில் சிறந்த நிபுணர்களை வைத்து, 1,000க்கும் மேற்பட்ட வினாத்தாள் வகைகள் தயாரிக்கப்பட்டன.

இதில், தோராயமாக கேள்விகளை எடுத்து,வினாத்தாள் தயாரிக்கப்படும். எனவே, இதுபோன்ற சந்தேகங்களுக்கு இடமில்லை' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி