சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்!

நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.


தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், பல்வேறு பிரிவுகளும் பலதரப்பட்ட சங்கங்களும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை, ஜாக்டோ-ஜியோ அமைப்பில் ஒருங்கிணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது வழக்கம்.

சில அமைப்புகள் அதில் சேராமல் தாங்களாகவே சுயமாக, தனித்துப் போராடுவதும் வழக்கம். அப்படியொரு அமைப்புதான் தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்காக, தங்களது குடும்பத்துடன் சென்னையை நோக்கி ஏப்ரல் 22-ம் தேதி படையெடுக்க உள்ளனர். மறுநாள் காலை முதல், அதாவது, 23-ம் தேதி முதல் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.


30.6.2009-ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம்செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருக்கிறது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி. ஆனால், சம்பளத்தில் மட்டும் ஏன் இந்த இமாலய வித்தியாசம்? அதை, உடனடியாகக் களைய வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவு இடைநிலை ஆசிரியர்களின் கேள்வி. இதற்காக, இவர்கள் கடந்த 9 வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இது இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவதில் மனம் வெறுத்துதான், தங்களின் இறுதி முயற்சியாக குடும்பத்துடன் சாகும் வரை போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட், "தமிழகத்தில் 6- வது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்தது. 6-வது ஊதியக்குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது.


அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தற்போது வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில், 10-ம் வகுப்பு  கல்வித் தகுதி மட்டுமே கொண்ட ஏனைய அரசு ஊழியர்களுக்குக்கூட ரூபாய் 9300-4200, 4400 என வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநில அரசு நியமிக்கும் ஒருநபர் அல்லது இருநபர் குழுக்களிடம் எங்களது ஊதியமுரண்பாட்டை விளக்கி ஊதியம் கோரும்போது, அவர்கள் 'இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம். அவர்களுக்கு  இந்தி தெரியாது; கணினி கற்றுக்கொள்ளவில்லை  எனப் பல காரணங்களைக் கூறி, எங்களது நியாயமான கோரிக்கைகளை  நிராகரித்துவிடுகிறார்கள்.



 1.6.2009-க்கு முன் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8370-2800  எனவும்,   1.6.2009- க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, எங்களுக்கு  5200-2800 என அடிப்படை ஊதியத்தில் 3170ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைத்தான் களைய வேண்டும் என்று போராடிவருகிறோம். இதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 20 முதல் 28 வரை 8 நாள்கள் மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். 8-ம் நாள்,  அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்,  2009-க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும்' என எழுத்துபூர்வமாக உத்ரவாதம் அளித்தார்கள். ஆனால்,அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த அரசு எங்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது" என்றார்.

7 comments:

  1. கண்டன அறிக்கை!
    கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு 2017 தேர்வர்கள் போராடினார்கள். அந்த போராட்ட புகைப்படத்திலுள்ள 2017 ல் தேர்ச்சி பெற்ற பெண் தேர்வர்களை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து தற்போது வாட்ஸ்அப்பில் புகைபடங்கள் வெளிவந்துள்ளன. இந்த அநாகரிகமான செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த கேவலமான செயலுக்கும் எங்களது 2013 ஆசிரியர் அமைப்பிற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 2017 பெண் தேர்வர்களை ஆபாசமாக சித்தரித்து அதன் கீழ் 2013 அமைப்பு என பதிவிட்டுள்ளதை கண்டிப்பதோடு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை கள் மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Ivan 2017 unitya keduka ninaikan ivana namba vendam frnds .posting ilanu therinchu ipdyayutanunga

      Delete
    2. தேவை இல்லாமல் 2017 தேர்வர்கள் முயற்சியை கெடுக்கும் விதமாக இத்தகைய கீழ் தரமான, நடக்காத பதிவை பதிவிட வேண்டாம்..

      Delete
    3. யூ டியுப்பில் தான் புருடா விட்டா இப்போ கல்விச்செய்தியிலுமா டா உன் புருடா விடுற.. நானும் 1 வருடசமா தான் பாக்குறேன் இந்த இளங்கோவன் வடிவேலு காமெடி நிகழ்சிய முடிக்கமாட்டிக்கானுக.. ரொம்ப ரீல் சுத்தாத வடிவேலு ரீல் அந்துரப்போகுது..

      Delete
    4. எங்க 2013 கூட்டமைப்பை ஜப்பானுல கூட்டாகோ... ஜமைக்கால கூப்டாகோ... ஏன் அமைச்சர் காலில் விழுந்து பணிநியமனம் பெற கூப்டாகோ.. யூ டியூப்ள கூப்டாகோ எங்க கிரகம் 2013ல பாஸாகி இப்பா லூசா சுத்துரோம்.. அடுத்து முன்னுரிமை கேட்டு டேரக்டா அதிபர் டிரம்ப்பை சந்திப்போம்.. வாங்கோ வாங்கோ.. இவனுக்கு கண்டன அறிக்கை ஒரு கேடா??

      Delete
  2. அவரவர்கள் தங்கள் பிரச்சனைக்காக போராடுகிறார்கள். இதில் ஒருவரை யோருவர் தாழ்த்தி கொள்ள வேண்டுமா?

    ReplyDelete

  3. பேனர், பதாகைகளை கைகளில் ஏந்தியும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் இட்டனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி