1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு


1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31  முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன.
தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றுபள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார்.

அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org)மே 31 இல்வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் சர்வர் திறனுக்கு ஏற்ப, புதிய பாடப்புத்தகங்கள் வகுப்புகள் மற்றும் பாடங்கள் வாரியாகமே 31 இல்படிப்படியாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், புதிய பாடத் திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி. அறிவொளி தெரிவி்த்தார்.

பள்ளி மாணவர்களுக்கான அனைத்துபாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) பார்க்கலாம். அந்த வகையில், 1,6,9,11-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களையும் பாட நூல் கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி