1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2018

1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு

*1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு உரிய புதிய பாட புத்தகத்தின்விலையை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அறிவித்துள்ளது

*புதிய பாடத் திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்குரிய
விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

*1, 6, 9 வகுப்புகளுக்கான பாட புத்தக விற்பனை கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 11-ஆம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விற்பனை, ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் தொடங்கும் முன்பு தொடங்கப்பட உள்ளது

*இந்த நிலையில், புதிய பாட புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை விவரம் வருமாறு

*1-ஆம் வகுப்பு முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.80, முதல் பருவம் தொகுதி 2 (கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல்) ரூ.70, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

*இதே போன்று 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்), தொகுதி 2-இல் கணக்கு ஆகிய புத்தகங்கள் தலா ரூ.90, தொகுதி 3-இல் (அறிவியல், சமூக அறிவியல்) ரூ.120, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

*9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.120, தொகுதி 2 கணக்கு புத்தகம் ரூ.100, தொகுதி 3-இல் (அறிவியல் ) ரூ.130, தொகுதி 4-இல் சமூக அறிவியல் புத்தகம் ரூ.150, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

*11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகத்தின் தலைப்புகள் இறுதியாக முடிவு எடுக்கப்படாததால் விலையை தற்போது அறிவிக்கவில்லை

*இதற்கான விலை விரைவில் அறிவிக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. கடைசியில் தவறு உள்ளது...
    11வகுப்பு

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி