ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியீட்டின்போதுஅமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியீட்டின்போதுஅமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி

ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்தாண்டு 10-ம் வகுப்பில் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியடைந்தவர்கள் ஜூன் 28-ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம். மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த தாவது:

அரசுப்பள்ளிகளை மூடுவது தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்கள் எழுகின்றனவே?

அரசு தொடக்கப்பள்ளிகள் 29-ல் ஒரு மாணவர் கூட இல்லை. அவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மொத்தமாக கணக்கெடுத்ததில் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மூடப்படாது. இதுகுறித்து அப்பகுதிகளில் உள்ள பெற்றோர், பொதுமக்களின் கருத்துகள் அறியப்பட்டு அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்சேர்க்கையை அதிகப்படுத்த விளம்பரம் செய்யப்ப டுமா?

கூடுதல் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருடன் இணைந்து கிராமங்கள்தோறும் ஊர்வலம், முரசு கொட்டுதல் மூலம் அரசின் சலுகைகள், புதிய பாடத்திட்டங்களை எடுத்துக்கூற அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் அடுத்த நடவடிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும். புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்? பாடத்திட்டத்தில் உள்ள பிழைகள் களையப்படுமா? புதிய பாடத்திட்டம் வெளியிடும்போது பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் மாதம் 1-ம் தேதி பிழைகள் இல்லாத பாடத்திட்டம் வெளியிடப்படும். ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஜூலை முதல் வாரம் பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) எழுதியவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 93,000-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து, 2014, 17-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடந்துள்ளது. இவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தும் அரசு விரைவில் முடிவெடுக்கும்.. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ந்து பொதுத்தேர்வு வருவதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறதே? மாணவர்கள் தொடர்நது தேர்வு எழுதிக் கொண்டிருந்தால்தான் அவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு தயாராக முடியும். தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பள்ளிகள் திறக்கப்படும்போது ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்குமா?

பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். சிறுபான்மை மொழி படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்தே ஆசிரியர்கள் தேர்வு செய்து நியமிக்கப்படுவார்கள். கிருஷ்ணகிரியில் தெலுங்கு படித்த 29 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் ஜூன் 28-ம் தேதி நடக்கும் தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

12 comments:

  1. ஆக மொத்தம் எல்லாமே தாற்காலிகம் தான் நிரந்தரமா எதுவுமே இல்லை.

    ReplyDelete
  2. Intha varudathaiyum ippadiye otteerunga!

    ReplyDelete
  3. Government school la kalvi tharam nalla erukkanum nu nenaithu amma trb and tet gondu vanthanga.anal eppa posting ku vaipe Ella

    ReplyDelete
  4. Thargaluga posting potta, tet eluthittu wait pandra naanga...........pandratha

    ReplyDelete
  5. Sonnathe solikitu iruka muttakuthi 2013 illa 2017 yarukavathu posting potu patikatha thakkuri thana athavathu vurupatiya senjurukaya una eruvatiku than kupitu poganum ni pathavila iruthu vilagiru ni irukagathatikum tamil naadu vuruppatathuta

    ReplyDelete
  6. Epoadiya manasatchiye illama peatti kidukkara, tet eluthina ellarum onnum ambani family illa, veala kidachan than engalukku vaalkai,

    ReplyDelete
  7. Sonnathe solikitu iruka muttakuthi 2013 illa 2017 yarukavathu posting potu patikatha thakkuri thana athavathu vurupatiya senjurukaya una eruvatiku than kupitu poganum ni pathavila iruthu vilagiru ni irukagathatikum tamil naadu vuruppatathuta

    ReplyDelete
  8. Nee late pannathunale kidaika veandiya nalla vaalkai ellam pochu, kidaikira vaalkaiyavathu inimel vaalalamnu nenacha posting podama, seeralikiriyada koomatta

    ReplyDelete
  9. Seekiram posting potta nalla irukum

    ReplyDelete
  10. தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்ய..எதற்கு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்.....

    ReplyDelete
  11. 7000 ovaikku poi vela pakkura andha loosu payalungala sollanum, enda kothanar velaike orunal kooli 800+ kudukuran, kudumba kashtamna enna mayirukku temporary job poringa, koolie velaiku pona kooda atha Vida kooda sambalam kidaikum, indha payalunga epdiyun temporary la sendha permanent la velaiku mathikalanu vaya polandhutu serndhu namma usura edukuranunga, oruthanum andha velaikku pogalana proper posting potty thana aganum. Tharkaligama ivanunga porathu nippatura varaikum govt la posting varathu.
    Nama thirundhama govt ah Kora solluratha nippatanum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி