தமிழகம் முழுவதும் விரைவில் 12 லட்சம் புதிய செட்-டாப் பாக்ஸ்கள் விநியோகம்: அரசு கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2018

தமிழகம் முழுவதும் விரைவில் 12 லட்சம் புதிய செட்-டாப் பாக்ஸ்கள் விநியோகம்: அரசு கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் 12 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு புதிய செட்-டாப் பாக்ஸ்களை விரைவில் வழங்க அரசு கேபிள் டிவிநிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு அனலாக் தொழில்நுட்பத்தில் கேபிள் டிவி சேவைவழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்கியது. இதைத் தொடர்ந்து, அரசு கேபிள் டிவி நிறுவனம்சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டது.2016 சட்டப்பேரவை தேர்தலில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், ‘அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அரசு கேபிள் நிறுவனம் டிஜிட்டல் ஒளிபரப்பை தொடங்கிய நிலையில், தனது அனலாக் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செட்-டாப் பாக்ஸ்களை வழங்கி வருகிறது.அனலாக் முறையில் குறைந்த சேனல்களை மட்டுமே பார்க்க முடியும். பல சேனல்கள் தெளிவாக தெரியாது. அதனால், டிஜிட்டல் ஒளிபரப்பில் இணைய பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அரசு கேபிள் நிறுவனத்திடம் போதிய அளவு செட்-டாப் பாக்ஸ்கள் இல்லாததால், முழுமையாக விநியோகிக்க முடியவில்லை. இதனால், பல ஊர்களில் அரசு கேபிள் நிறுவன இலவச செட்-டாப் பாக்ஸ் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது, அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் டிஜிட்டல் முறையில் ரூ.125 கட்டணத்தில் 205 சேனல்களும், ரூ.175 கட்டணத்தில் 287 சேனல்களும் வழங்கப்பட்டு வருகிறது. அனலாக் முறையில் ரூ.70 கட்டணத்தில் 80 சேனல்கள் வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.அரசு கேபிள் டிவி சார்பில் செட்-டாப் பாக்ஸ் மூலமாக கடந்த செப்டம்பர் முதல் டிஜிட்டல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளோம்.

இதுவரை 24 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு செட்-டாப் பாக்ஸ்கள் விநியோகிக்கப்படும். அதன்மூலம், வரும் ஜூலை முதல் வாரத்தில் எங்கள் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 36 லட்சமாக உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி