+2 Result - பாடவாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2018

+2 Result - பாடவாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில்...

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. www.tnresults.nic.in, dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவை அறியலாம்.
பிளஸ் 2 தேர்வினை 8,60,434 மாணவர்கள் எழுதினர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 1% குறைந்துள்ளது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-டூ தேர்வில் 97% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.3%, திருப்பூர் மாவட்டம் 96.1% தேர்ச்சி பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 238 அரசுப் பள்ளிகள் ஆகும்.

தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொழிப்பாடத்தில் 96. 85% மாணவர்களும், ஆங்கிலத்தில் 96.97% மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 95% மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 96.3% மாணவர்களும், கணித பாடத்தில் 96.1% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 93.9% மாணவர்களும், விலங்கியலில் 91.9% மாணவர்கள், கணினி அறிவியலில் 96.1% மாணவர்கள், வணிகவியலில் 90.3% மாணவர்கள், கணக்குபதிவியலில் 91% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் புள்ளியியல்- 98.31%, புவியியல்- 99.21%, நுண் உயிரியல்-98.96%, உயிர் வேதியியல்-98.53%, நர்சிங்-97.86%, நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ்-99.87%, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ்-98.09%, ஹோம் சயின்ஸ் - 99.78%, இந்திய கலாசாரம் - 96.08%, அட்வான்ஸ்ட் மொழிப்பாடம்-91.89%, வணிக கணிதம்-95.99% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி