பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று பிற்பகலில் வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2018

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று பிற்பகலில் வினியோகம்

பிளஸ் 2 தேர்வு எழுதி யோருக்கான மதிப்பெண் சான்றிதழ், இன்று பிற்பகலில், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் முதல், ஏப்., வரை நடந்தது.இதில், 8.60 லட்சம் மாணவர்களும், 40 ஆயிரம் தனித்தேர்வர்களும் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், ஏப்., 16ல், தேர்வர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட்டன.

அதிலேயே மதிப்பெண் விபரமும் அனுப்பப்பட்டது.பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு இன்று, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட உள்ளன.மாணவர்கள், தங்கள் பள்ளிகளிலும், தேர்வர்கள், தேர்வு எழுதிய மையங்களிலும், இன்று பிற்பகல் முதல் சான்றிதழை பெறலாம்.

'பள்ளிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசுதேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி