பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2018

பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு

''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூரில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில்,நேற்று நடைபெற்றது.விழாவில், பங்கேற்ற,அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:அண்ணா பல்கலைக்கழக, 'ஆன்லைன்' கலந்தாய்வு முறைக்கு மாணவர்கள் மற்றும் பிற தரப்பினரிடையே வேண்டாம் என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து,உயர் கல்வி துறை அமைச்சரிடம் பேசி, பரிசீலனை செய்யப்படும்.தமிழகத்தில், வரும் காலத்தில், பிளஸ் 2 படித்தாலே வேலை வாய்ப்பு கிடைத்துவிடும். அந்தளவிற்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

மேலும், மூன்று லட்சம் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மேலை நாடுகளுடன் இணைந்துஅரசு சார்பாக மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச வகுப்புகள் நடத்தப்படும்.பள்ளி மாணவர்களின் அறிவுதிறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, மூன்று லட்சம் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கவும், 3,000 பள்ளி மாணவ - மாணவியருக்கு, 'ஸ்மார்ட்' பயிற்சி வகுப்புகள் துவங்கவும், அரசு சார்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

1 comment:

  1. 💢ஆசிரியரல்லாப் பணியாளர்கள் தேவை:(அரசு உதவி பெறும் பிரிவு) தமிழக அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்: நேர்காணல்:28/06/2018


    ♨https://kaninikkalvi.blogspot.in/2018/05/28062018.html?m=1


    💢Migration of data relating to Scholarships/Fellowship's From Canara Bank branches to Institution based- UGC Webportal:Date - 18/05/218


    ♨https://kaninikkalvi.blogspot.in/2018/05/migration-of-data-relating-to.html?m=1

    More Educational News Visit

    kaninikkalvi.blogspot.in & Add Your WhatsApp Group: 8807414648

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி