தினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2018

தினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம்

தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை அறிவித்த வண்ணம் உள்ளது,அந்தவரிசையில் ரூ.509/- மற்றும் ரூ.799/- திட்டத்தில்அசத்தலான டேட்டா சலுகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டேட்டா ஆஃபர் பல்வேறு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதியதிட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, அறிமுகமான ஜியோ  போஸ்ட்பெயிட் (JioPostPaid) திட்டமானது. மாதத்திற்கு ரூ.199/- என்கிற விலையை கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு  வைப்பு நிதியும் தேவையில்லை. குறிப்பாக டேட்டா நன்மை மட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதுமான ரோமிங் உட்பட வரம்பற்ற  குரல் அழைப்புகளையும் பயனராகில் அனுபவிக்கலாம். மேலும் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.509 மற்றும் ரூ.799 திட்டங்களைப் பற்றி விரிவாகபார்ப்போம்.

ஜியோ ரூ.509/- திட்டம்:

ஜியோ அறிவித்துள்ள ரூ.509/- திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ ரூ.509/- திட்டத்தில் பயனர்கள் மொத்தமாக 112ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.509/- திட்டத்தின் அம்சங்கள்:

ஜியோ ரூ.509/- திட்டத்தில் பயனர்கள் அனைத்து எஸ்டிடி மற்றும் லோக்கல் கால்அழைப்புகளை இலவசமாக பெற முடியும், அதன்பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் வரைஇந்த திட்டத்தில் பெற முடியும்.ஜியோ ரூ.799/- திட்டம்:ஜியோ அறிவித்துள்ள ரூ.799/- திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ ரூ.799/- திட்டத்தில் பயனர்கள் மொத்தமாக 140ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.799/- திட்டம்:

ஜியோ ரூ.799/- திட்டத்தில் பயனர்கள் அனைத்து எஸ்டிடி மற்றும் லோக்கல் கால்அழைப்புகளை இலவசமாக பெற முடியும், அதன்பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் வரைஇந்த திட்டத்தில் பெற முடியும்.

2ஜிபி டேட்டா:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.448/-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 84நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பின்பு ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 91 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி