800 அரசுத் தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2018

800 அரசுத் தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்ட தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 800 அரசுத் தொடக்க பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
10 மாணவர்களுக்கு குறைவாகப் படிக்கும் அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்துக்கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 800 பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. 800 பள்ளிகளை மூடுவது பற்றிய அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் எண்ணிக்கை குறைந்தது ஏன்?:
கல்வி உரிமைச் சட்டம் காரணமாக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் மூலம் வரும் ஆண்டில் 1.25 லட்சம் பேர் தனியார் பள்ளியில் சேரக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் சங்கம் கண்டனம்:
800 தொடக்க பள்ளிகளை மூடும் அரசின் முடிவுக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே அரசுப்பள்ளிகள் மூடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அரசுத் தொடக்க பள்ளிகளை மூடும் முடிவை கைவிடுமாறு ஜக்டா நிர்வாகி இளமாறன் கூறியுள்ளார்.  

16 comments:

  1. நல்ல க்ளோஸ் பண்ணுங்க ஜி, அப்போ தான் இந்த பிரைமரி வாத்திங்களுக்கு புத்தி வரும்,

    ReplyDelete
  2. Private school ku approved kuduthukitte iruntha ippadithan nadakkum

    ReplyDelete
    Replies
    1. elementary school la paadam nadathattiyum ipdi nadakkum

      Delete
  3. கல்வியை அரசாங்கமே முழுவதும் ஏற்று நடத்த வேண்டும்.. தனியார் வசம் உள்ள அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்

    ReplyDelete
  4. Padikatha naigal iruntha ithu polathanga nadakum.....private school muditu....800 scla work panra teacher children & .unga children gt school serunga....

    ReplyDelete
    Replies
    1. avanga paadam nadathuna kandippa seppanga sir

      Delete
  5. Padikatha naigal iruntha ithu polathanga nadakum.....private school muditu....800 scla work panra teacher children & .unga children gt school serunga....

    ReplyDelete
  6. பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்தவர்களே.ஏனெனில் இப்பொழுதெல்லாம் வேலை கிடைப்பதே நாற்பது வயதில் தான்

    ReplyDelete
    Replies
    1. 100 percent wrong because 25000 tet teachers are youngsters

      Delete
  7. Government should pass the act, Government Employee's children should study in Government schools only like this...

    ReplyDelete
  8. government must be conduct tet test every 5 years once to govt school teachers and also govt teachers must join to their child in govt school only thenonly govt school standard will improve

    ReplyDelete
  9. Enna kodumaida kamarajar sir open panna school ellathaiyum nee close pannitu iruka. Govt school admn improve Pandratha vitutu ippadi close panna Ellam sari ahiduma sir. Very worst Govt. Innum konja naal la ethalam close panna porinka nu therila

    ReplyDelete
  10. if government staff performed their duty well, this problem could have been averted

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி