பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் - BEO.,க்கு (AEEO) அதிகாரம் உண்டா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2018

பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் - BEO.,க்கு (AEEO) அதிகாரம் உண்டா

மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைமாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து வந்தனர்.
சமீபத்தில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது. அனைத்து வகை பள்ளிகளையும் வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) குறிப்பிட்ட வட்டாரங்களைச் சேர்த்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்க உள்ளனர்.உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.

புதிய உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும். அதன் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரை விட பதவியில் உயர்ந்தவர் என்பதால், அப்பள்ளிகளை ஆய்வு செய்ய முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளிகள் எண்ணிக்கை 500 யை யொட்டி இருக்க வேண்டும். வட்டாரத்தையும் உடைக்க கூடாது என, தெரிவிக்கப்பட்டது.

 இதனால் 3 முதல் 5 வட்டாரங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. சில வட்டாரங்களில் பள்ளிகள் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாக உள்ளதால், 500 என்ற எண்ணிக்கை அடிப்படையில் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.

11 comments:

  1. வட்டடார கல்வி அலுவலர் BEO தொடக்க மற்றும் நடுப்பள்ளிகள் ,இந்நிலையில் உள்ள தனியார் பள்ளிகளை மட்டுமே பார்வையிட முடியும்.GO 101

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. வட்டார கல்வி அலுவலர்களாக AEEO'S நியமிக்கப்பட்டால் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. ஆகவே BEO பதவியை உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு வழங்குவதே சிறப்பு ஆகும்

    ReplyDelete
    Replies
    1. Uyarnilai thalamai aasiriyar thaguthil ullavar mel nilai palliyai aaivu seivathai etru kolla mudiyuma sir

      Delete
  4. 50% பதவி உயர்வு,50% நேரடி நியமனம் என்ற வகையில் BEO பதவிக்கு போட்டித்தேர்வு வர வாய்ப்புள்ளதா????

    ReplyDelete
  5. ஒரு உயர்நிலைப்பள்ளி த.ஆ. மேல்நிலைப்பள்ளி த.ஆ. ஆக மற்றும் DEO ஆக செல்ல தகுதி உடையவர். ஆகவே உயர்நிலைப்பள்ளி த.ஆ.மேல்நிலைப்பள்ளியில் 6,7,8 வகுப்புகளை ஆய்வு செய்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு AEEO (ப.ஆ. நிலை) உயர்நிலைப்பள்ளி த.ஆ ஆக வந்த பின்புதான் மேல்நிலைப்பள்ளி த.ஆ. ஆக அல்லது DEO ஆக செல்ல தகுதி உடையவர்.
    ஆகவே ஒரு உயர்நிலைப்பள்ளி த.ஆ. மேல்நிலைப் பள்ளியில் உள்ள 6,7,8 வகுப்புகளை ஆய்வு செய்வதில் தவறில்லை sir. தற்போது DEO தான் 6,7,8,9,10 வகுப்புகளை ஆய்வு செயது வருகிறார்கள்.

    ReplyDelete
  6. தொடக்க நடுநிலைப் பள்ளிகள் BEO கட்டுப்பாட்டிலும் உயர்நிலைப் பள்ளிகள் DEO கட்டுப்பாட்டிலும் மேல்நிலைப்பள்ளிகள் CEO கட்டுப்பாட்டிலும் வரும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி