ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை : மதிப்பெண்ணை வாரி வழங்கிய தேர்வுத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2018

ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை : மதிப்பெண்ணை வாரி வழங்கிய தேர்வுத்துறை

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை திருத்தத்தில், மதிப்பெண்ணை வாரி வழங்கியதால், ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அரசு தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், வினாத்தாள் கடினமாக இருந்தது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் பல கேள்விகள், மாணவர்களின் அறிவு நுட்பத்தை சோதிக்கும் விதமாக இருந்தது. இது குறித்து, மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவித்தனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால், தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண்ணில் பாதிப்பு இருக்கும் என, கருதப்பட்டது.ஆனால், எந்த பாதிப்புமின்றி, மற்ற ஆண்டுகளை விட அமோகமான தேர்ச்சியும், மதிப்பெண்களும் கிடைத்துள்ளது. 

இந்த ஆண்டு, 10.01 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 2017ஐ விட, ஒரு சதவீதம் கூடுதலாக, 94.45 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. ஐந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தான் அதிக மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில், 2014ல், 90.70 சதவீதம்; 2015ல், 92.90 சதவீதம்; 2016ல், 93.60 சதவீதம்; 2017ல், 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு, 94.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

இது குறித்து, தேர்வுத் துறையினர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு தேர்வில் கடின வினாத்தாள் என, மாணவர்கள் புகார் செய்ததால், விடை திருத்த குறிப்பு, எளிதாக தயாரிக்கப்பட்டது. விடை திருத்தத்தில் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம்; அதிநுட்பமாக திருத்த வேண்டாம் என, ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்' என்றனர்.

தேர்வு எழுதியோர் எண்ணிக்கை சரிவு : தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடுமையாக சரிந்துள்ளது. 2014ல், 9.26 லட்சம்; 2015ல், 9.85 லட்சம்; 2016ல், 9.47 லட்சம்; 2017ல், 9.26 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 2017ஐவிட, இந்தாண்டு, 28 ஆயிரத்து, 766 பேர் குறைவாக, 8.97 லட்சத்து, 945 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இதற்கு, பள்ளிக்கல்வியை பாதியில் முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான் காரணமா என்பதற்கான ஆய்வை, அதிகாரிகள் துவக்கிஉள்ளனர்.
- நமது நிருபர் - தினமலர் 

5 comments:

  1. Useless how can its possible no chance to give extra marks without proper answers very few cases may be got pass by one or two grace marks

    ReplyDelete
  2. மேலே காணும் பதிவுக்குச் சொந்தக்காரர் எந்த அடிப்படையில் இச்செய்தியை வெளியிட்டார்?
    ஆசிரியர்கள் மதிப்பெண்களை வாரி வழங்கும்போது பக்கத்தில் இருந்து உதவி செய்தாரோ?
    மாணவர்களின் மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்தவில்லை; மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்தால் ஆசிரியர்கள் மதிப்பெண்களை வாரி வழங்கினார்கள் என்று கூறுவோர் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் மாணவர்களின் புரிதல் மற்றும் படித்தல் திறனையும் மறந்துவிடுகிறார்கள். உங்கள் ஆசிரியர் உங்களுக்கு மதிப்பெண்ணை வாரி வழங்கினாரா? பள்ளிச் சூழலை விட்டு வெளியே வந்தவுடன் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதைப்போல, ஆசிரியர்களைக் குறை கூறும் புத்தி தொற்றுவியாதி போல பலருக்கும் பரவிவிடுகிறது.

    ReplyDelete
  3. அடேய் நாட்டுல முன்ன எல்லாம் ரெண்டு மூணுன்னு பெத்து போட்டுட்டு இருந்தானுங்க, இப்போ எல்லாமே ஒன்னே ஒண்ணுன்னு மாறிடுச்சு, லூசு மாதிரி யோசிக்க கூடாது,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி