இனி அரசுப்பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தர்ம சங்கடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2018

இனி அரசுப்பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தர்ம சங்கடம்

தமிழகத்தில் செயல்படும் 29 ஆயிரம் அரசுத் துவக்கப்பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகளில் 70 சதவீதம்மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 25 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதில், 3,500 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள்தான் படிக்கின்றனர்.அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்காக 25க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது.

ஆங்கிலப்பள்ளிகள் மீதான மோகம், இதற்கு முக்கியக் காரணம். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்பட்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் குறையவில்லை.மிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது. மாவட்ட வாரியாக இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், வேறு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய ஆசிரியர்களின் விவரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

முதற்கட்டமாக இந்தப்பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், துவக்கப்பள்ளிகளில் மட்டும், 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.பணி நிரவல் செய்தாலும்கூட, உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும். அதிகமாக உள்ள 5 ஆயிரம் ஆசிரியர்கள் நிலை குறித்து இனிமேல்தான் அரசு முடிவெடுக்கும்.

இதற்கிடையே ‘நகர்ப்புற அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாகவும், கிராமப்புறங்களில்15 மாணவர்களுக்குக் குறைவாகவும் இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்குப் பெற்றோர் ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. சிறு குழந்தைகளைப் பஸ்களில் தனியாக அனுப்புவது, செலவழித்து வேன்களில் அனுப்புவது போன்ற நிலை ஏற்பட்டால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் ஏழ்மையான பெற்றோர் தவிர்ப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.இதுகுறித்த விழிப்புணர்வைப் பெற்றோருக்கு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தினாலும்கூட, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளைத் தொடர்ந்து செயல்படுத்துவது இயலாது என்று அரசு கருதுகிறது.ஆனால், இதைத் தர்மசங்கடமாகக் கருதாமல், எந்த ஒரு மாணவனும் தொலைதூரம் அல்லது வேறு காரணங்களுக்காக பள்ளியில் இருந்து இடைநிற்றல் என்பதைக் கட்டாயம் தடுக்கவும், தவிர்க்கவும் வேண்டும். இதற்காக ஏற்படும் இழப்புகளை அரசு தாங்கிக்கொண்டு, மாணவர்களின் நலனே முக்கியம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

40 comments:

  1. ஆங்கில மோகம் காரணமல்ல அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவாக உள்ளது.தனியார் பள்ளிகளில் ரூ.5000 சமபளம் பெற்று தரமான கல்வி அளிக்கின்றனர் ஆசிரியர்கள்.ஆனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் ஆனால் தரமான கல்வி ??????.

    ReplyDelete
    Replies
    1. Neenga yantha palliyil padithu ethu ponru senthanai seikirirgal
      Arasu palliya thaniyar palliya

      Delete
    2. No govt schools are still best but parents not ready to admit their childrens so its not mistake of govt that those the students studied through english medium do not have enough ability to clear neet or tnpsc or trb or tet also they do not ready to talk english perfectly except few so still govt schools are very best compare with private schools all teachers working in private schools got failed in trb or tet so no other way so that they are working in private schools but those the teachers cleared tet or trb only working in govt schools except some senior teachers now parents and this society can tell who is the best teachers after failed in tet or trb working in private schools or after passed and working in govt schools who is best you can decide and send your childs to them here after do not blame govt govt schools and govt school teachers

      Delete
    3. private teachers are not having proper coaching class facilities to clear trb or tet. they are working hard inside the campus and put most of the time in work itself (like paper correction etc), don't just insult them as they didn't clear exams, coz of family situation they could not afford time and money on coaching, I have seen many people who got cleared tet and trb, they are just supported by family members, most of them are youngsters who never worked in private firms, even those who cleared trb are not capable to teach senior secondary in recent days especially science subjects (trb and higher secondary syllabus are different). don't under estimate everyone's capacity, and never get proud where you are presently, nothing is permanent.

      Delete
    4. Tet and trb cleared teachers are came from same suituations most of them already worked in private schools only so after using their skills and ability now they are in govt school teachers so govt school or private schools rich or poor family condition or environment is not a matter how can you use your skills and abilities that will produced better result so dont try to make useless reasons for fails of your life

      Delete
    5. Getting passed in tet/trb is not a life time achievement dude. Its not the parameter that decides one's failure or success. You know the govt can not provide everyone with govt salary. Its just an opportunity that comes in a while but not daily. Everyone knows those who worked hard on this got cleared. Also those who failed they don't mean they are dump. In a class of 40 students, not everyone is unique and not everyone is gonna make first three ranks, If you decide those who get rank alone is intelligent and rest of the people are stupid, you are the stupidest teacher ever. Its not the reason I am telling, this is the fact. Instead of wasting time here better go for admission duty like private college teachers and catch some students. The minister also instructed you guys will be responsible for admissions.

      Delete
    6. Teacheris a guide not a god to do all for the students if a student follow a instruction of guide he will be a better student if not he will be a 😇😇 no word for it so tryvto accept govt schools teachers are best ever

      Delete
    7. மாணவர்களின் தேர்ச்சிக்கும் சமூக பொருளாதார நிலைக்கும் மிக நெருக்கமாக தொடர்பு உள்ளது என்பதை அறிந்து இது போன்ற கட்டுரைகளை எழுதலாம்.. யார் வேண்டுமானாலும் கேவலமாக பேச ஆசிரியர்கள் ஒன்றும் கிள்ளுக் கீரைகள் அல்ல நண்பரே....


      Delete
  2. TET pass teachers also give more good result compare private school. so govt compulsory TET EXAM for all working govt teachers also with special G.O.

    ReplyDelete
  3. நீங்கள் பார்த்தீர்களா அரசு பள்ளியில் பாடம் நடத்த வில்லை என்பதை இரவு வந்து விட்டால் சமூகவிரோத செயல்கள் அங்குதான் நடைபெறுகிறது அதை தடுக்க காவலர் முறையாக நியமிப்பது கிடையாது. பள்ளியை தூய்மையாக வைத்துக்கொள்ள முறையான பணியாளர்கள் கிடையாது மாணவர்களே செய்ய வேண்டியுள்ளது. உள்கட்டமைப்பே இல்லை யார்தான் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சார், பசங்க கிட்ட CM CELL பத்தி சொல்லி புரியவைங்க, எங்க பள்ளிகூடாத்துல அடிப்படை வசதிகள் இல்லைன்னு கம்ப்ளைன்ட் பண்ண சொல்லுங்க, அப்படி கம்ப்ளைன்ட் பன்னனுனா உடனே அங்க இருந்து பதில் வரும், திரும்ப திரும்ப கம்ப்ளைன்ட் பண்ண சொல்லுங்க, ஒரு வகுப்புக்கு 10 பேரு CM CELLக்கு தகவல் அனுப்புனா கண்டிப்பா நல்லது நடக்கும், அப்படி இல்லையா RTIல போடுங்க, நாம தான் அரசாங்கத்துல இருக்குற வசதிகள பசங்க கிட்ட சேர்த்து கேள்வி கேக்க வைக்கணும், நாம கேள்வி கேக்காத வரைக்கும் எதுவுமே மாறாது.

      Delete
  4. ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இன்னும் அழகு.சும்மா ஆசியர்களையே குறைகூறாதிர்கள் காலம் மாறிவிட்டது மாணவர்களை தனியார் பள்ளிகள் போன்று கட்டுக்கோப்பாக வைக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக உரைதீர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களை குறை சொல்லும் முன்பு தங்கள் குறைகளை சற்று சிந்தியுங்கள். ஆங்கில வழி கல்வி மோகம் பெரும்பாலான பெற்றோர்கள் மனதில் சிறந்ததாக பதிய பட்டுவிட்டது.

      Delete
    2. சார் ஆங்கில வழிக் கல்வி இப்போ மோகம் இல்லை, அடிப்படை ஆகிடுச்சு. மூணு தலைமுறைக்கு மேல ஒரு குடும்பத்துல காலேஜ் படிச்சவங்கள நல்லா பாருங்க, எல்லாமே ஆங்கில வழிக் கல்வி கத்துகிட்டவன்களா இருப்பாங்க, இப்போ எல்லாமே சர்வதேச அளவுக்கு போகிடுச்சு, அறிவியல் தொழில்நுட்பம் எல்லாமே வேகமா வளந்துட்டு போகுது, இப்போ வந்து தாய்மொழிக் கல்வி வேணுன்னு ஒருத்தன் நெனச்சான் அப்படினா அவனோட பொருளாதாரம் கண்டிப்பா உயராது. அதுக்காக தமிழ் படிக்க கூடாதுன்னு யாரும் சொல்லல. கண்டிப்பா தமிழ் ஒரு பாடமா, இலக்கியமா இருக்கணும். தமிழ் இலக்கியம் படிக்கிற பசங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கணும். வரலாறு, அரசியல், தத்துவம் எல்லாம் தமிழ்ல இருக்கணும். ஆனா அத பண்ணுறதுக்கு யாரும் முன்வர மாட்டாங்க. நாம அப்போ மேல்நிலை வரைக்கும் தமிழ்ல படிச்சோம், அப்பறம் கல்லூரில ஆங்கிலத்துல தான் படிக்கணுனு சொன்னாங்க, ஒண்ணுமே புரியாம டிகிரி வாங்குனோம், PG படிக்கும்போது தான் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது, இப்போ தான் நல்ல புரியுது, ஆனா 12 வரைக்கும் ஆங்கில வழில படிச்சவன் எல்லாம் ஈஸியா கேம்பஸ்ல செலக்ட் ஆகி MNC கம்பெனி போய்ட்டான். இதே ரிஸ்க் நான் என்னோட பையனோட lifeல எடுக்க நான் விரும்புவனா.. யோசிச்சு பாருங்க. இது மோகம் இல்ல, அத்தியாவசியம் ஆகிடுச்சு.

      Delete
    3. ubuntu sir 100%coreccta sonneega;ethe nilamaithan pg paditha ennakum. inntaya nadaimurai ethuthan.govt job illai.private ill velai vaippu vendum enntal communication ethiparkkiran.ethanl ohralavu padithavarkal,ennudaya pillai pathaikkakudthu enntu kastapattu private school annuppukiran enpathuthan unnmai.kalvi ennpathu arasin pirithalum kollkai.

      Delete
  5. எங்கள் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக 12 ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றுள்ளோம் இருந்தும் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது.காரணம் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிறப்பப்படவில்லை. கழிப்பறை பெரும் பிறட்ச்சனை.

    ReplyDelete
  6. நானும் TET ல வந்தேன் என்னால் முடிந்தவரை மாற்ற வேண்டும் என நினைத்தேன் கிடைத்த பெயரோ புது விலக்காமாறு

    ReplyDelete
    Replies
    1. Dont feel bro you are a able teacher mind it you got oppurtunity after heavy competition so dont care the words from inability persons always do something for students welfare in your future my best wishes for you thak you

      Delete
  7. *✈ June 9 முதல் 17-ம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு தஞ்சாவூரில் ஆட்கள் தேர்வு: +2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்✈*
    >

    ✈https://kaninikkalvi.blogspot.in/2018/05/june-9-17-2.html?m=1

    🌍More News Visit -

    kaninikkalvi.blogspot.in
    More News
    Add Your Whatsapp Group: 8807414648

    ReplyDelete
  8. Dei loosu enda epadi useless news potu engala patuthura un website la poduda please mudiyalada un news parthale comedy ya irukuda unna yarume kandukarathu illa aparam enda epadi pandra yaruda nee please engala vitududa

    ReplyDelete
    Replies
    1. Dei vetti payala
      Moodikitu comments ah mattum parru
      Naa comments potta unaku yenda eriyuthu
      Kalviseithi podaatha news Naa poduren
      So moodikitu un vetti pechi polapa paaru

      Delete
    2. En news kalviseithiya vida fastaa useful ahave irukumnu what's app group la irukuravangaluku theriyum.

      Unakku Comedyaa avloo kaduppa iruntha thookumaattikitu saavu da porambokku

      Delete
  9. Then why govt teachers not admitted their childrens at govt schools.any idea sir?

    ReplyDelete
    Replies
    1. There are many teachers who admitted their childrens in govt school....

      Delete
  10. Who said it those the peoples receiving all free things from the govt even rice itself also not ready to send their child to govt schools govt teachers not receiving any free things from govt except their salary than how can they do it

    ReplyDelete
    Replies
    1. Sir do you think this is a valid reason? Poor student life is in the hands of govt school teachers only. But you have to agree more than 50% of teachers are not good in govt school do you agree!

      Delete
    2. It may be possible in elementary level but no chance in high and higher sec schools if you are not satisfied about your area govt schools teachers you can report to that school hm if there is no response you can report to the deo or ceo office than all will come to end so you will do it from june itself

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir am not blaming teachers my son is studing at govt Anganvadi school at Chengalpattu.Alagesan nagar. Even my self is M.com B.ed and my wife is MA.Bed.

      Delete
    2. Sir am not blaming teachers my son is studing at govt Anganvadi school at Chengalpattu.Alagesan nagar. Even my self is M.com B.ed and my wife is MA.Bed.

      Delete
  12. Already they studying in govt schools we are also govt officials from govt schools only

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Yes so that we are sending them to govt schools you know we all expect our needs and specilities from govt for tha every day we are blaming govt and making so many strighs against govt but we are non ready to send our childs to govt schools oh what a beauty😢😢😢😢

      Delete
    2. அதான் முன்பே கூறினேனே கல்வி சிறப்பாகவே கற்பிக்கிறோம். Beer bottle பொறுக்க. ஆணுறை பொறுக்க குப்பை பொறுக்க நாங்களும் எங்கள் மாணவர்களும் தயார் இல்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் ஆசியர் பணியில்லாம் அனைத்து பணியையும் நீங்கள் செய்யலாம் அரசுக்கு உங்களை போன்றோர்தான் தேவை

      Delete
    3. muttilum unnmai,giramapura school compound wall illai ethanal samugavirotha kummal attuliyam nadakirathu weekend migavum mosamaga erukkum.ethe nilai ella districtlum unndu.

      Delete
  14. State board,CBSE maths home tuition in chennai.10,11,12
    contact 9790039939.
    Plus two failures also for one month(jun25) above 100 is conform.

    ReplyDelete
  15. In private schools students are checked every now and then by both parents and teachers becuse they are paying. How about government schools the parents also have same responsible as the teachers. How many of us doing that?The system of CBSE,NCRT,STAT BOARD& Matric should be abolished. Only freebies is not the remedy.parents,Society ,teachers& government all have same responsibility.Many government schools have good infrastructure but lavishly used by senior students and any mistake takes place nobody to correct them because of future problem. Nobody should scold give guidance which will result in parents going for police or students leting teachers to media/suecide attempts who is responsible for this. Provided the android phones and mass communication do maximum problems.

    ReplyDelete
  16. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி ஓட முதன்மை கரணம், அங்கு படித்தால் நிறைய மதிப்பெண்கள் பெறலாம் அரசு மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்துவிடலாம் என்றுதான். இதனை தடுக்க அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு வேலைகளில் சேர 50% இட ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளிள் படித்த மாணர்களுக்கு ஒதுக்கிப்பாருங்கள் தெறியும்.ஆமாங்க அரசுப் பள்ளியில் படித்தவனுக்கு அரசு கல்லூரி,வேலையில் முன்னுரிமை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி