ஆசிரியர் பட்டய வகுப்புகள் குறைப்பை எதிர்த்து வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2018

ஆசிரியர் பட்டய வகுப்புகள் குறைப்பை எதிர்த்து வழக்கு

தொடக்க கல்வி ஆசிரியர், பட்டய வகுப்புகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு தாக்கல்

தமிழகத்தில், ௨௦ மாவட்டங்களில் இயங்கி வந்த, தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய வகுப்புகளை, ௧௦ மாவட்டங்களுக்கு என குறைத்து, ௯ம் தேதி, பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:தமிழகத்தில், ௨௦ மாவட்டங்களில், அரசின் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் நடத்தப்பட்டு வந்த, தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய வகுப்புகள் மூடப்பட்டு, ௧௦ மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 விசாரணை

இதனால், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், மாணவர்கள் சேரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழை எளிய மாணவர்களால், கணிசமான தொகையை செலுத்தி, தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மேலும், வேறு மாவட்டங்களுக்கும் சென்றும் படிக்க முடியாது. தனியார் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்த அரசு உத்தரவு உள்ளது. இதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி பவானி சுப்பராயன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கல்வித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன், ௫ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்

7 comments:

  1. அடேய் லூசு பயலுங்களா, அந்த வீணா போன கோர்ஸ்ல சேந்து என்னாத்த கிழிக்க போறீங்க, ஏற்கனவே டெட் பாஸ் பன்னவனுக்கே இங்க vacancy இல்ல, இதுக்கு மேல அந்த கோர்ஸ் நீ படிக்கிறதும் ஒன்னு தும்ப-பூல தூக்கு மட்டிகிறதும் ஒன்னு,

    ReplyDelete
  2. அரசு வேலை மட்டும் குறிக்கோள் இல்லை.அவங்க வயிற்று பிழைப்புக்கு ஏதோ ஒரு தனியார் பள்ளியில வயித்த கழுவ பயன்படும்.அதனால மூடக்கூடாது.அதற்கு பதிலாக தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முழுவதும் மூடலாம் அல்லது சீட் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம்.அதை விட்டுட்டு அரசு பயிற்சி கல்லுரிகளை மூடுவது ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்.பாவமும் கூட .

    ReplyDelete
  3. Paper 1 ku first cv nadaththi posting podunga da. Aparam paakalam

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. It is a very good solution.D.T.E.is waste for nowadays.

    ReplyDelete
  6. It will useful for private scholl

    ReplyDelete
  7. It will useful for private school
    .1 to 5 as per govt norms Dted compulsory

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி