'ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் அவசியம் இல்லை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2018

'ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் அவசியம் இல்லை'

புதுடில்லி: ''மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
தன்னார்வ ஏஜன்சிகளுக்கான நிலைக்குழு கூட்டத்தில், அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜிதேந்திர சிங்நேற்று பேசியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அவசியம் கிடையாது. உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, வங்கிகளை அணுகாமல்சமர்ப்பிப்பதற்கான தொழில் நுட்பத்தை செயல்படுத்த, ஆதார், கூடுதல் அம்சமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார் இல்லாததால், சில ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதில் சிரமம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அமைச்சரின் பதில், முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி