தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.awskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கபூர் கூறுகையில்,
இந்தியாவில் சட்டக் கல்வி சிறப்பான வகையில் இருந்தாலும், சட்டக் கல்வி முடிப்பவர் கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக வழக்கறிஞர்களிடத்தில் தனியாக பயிற்சி பெறுகின்றனர்.

இதனால் அவர்கள் சொந்தமாக தொழி லைத் தொடங்க சில ஆண்டுகள் கூடுதலாக செலவாகிறது. இந்த அனுபவப் பயிற்சி காலகட்டத்தை தவிர்க்கும் விதமாக லா ஸ்கில்ஸ் இணையதள பயிற்சி இருக்கும். அதுபோல கார்ப்பரேட்டுகள் ஈடுபடும் ஒப்பந்தங்கள், அவர்களுக்கான சட்ட நடைமுறைகளையும், மற்றும் வழக்கு நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம். சட்ட மாணவர்கள் அல்லாதவர்களும் இந்திய சட்ட நடைமுறைகள் குறித்த கல்வி பெற இந்த இணைய தளம் உதவும். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் சட்ட விவரங்களை அளிக்கிறோம். பயிற்சிக்கான சராசரி கட்டணம் ரூ.4,000 என்கிற அளவிலேயே நிர்ணயித்துள்ளோம். சட்டக் கல்லூரிகள்அளவில் இந்த இணைய தளத்தை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சட்ட விவரங்களை அளிக்கிறோம் வரும் ஆண்டுக்குள் 10 மொழிகளில் அளிக்க உள்ளோம். தினசரி வழக்கு விவரங்கள் வரை இணையதளத்தில் உடனடியாக பார்க்க முடியும் என்றார். சட்டத் தகவல்கள் தேடல், பகுபாய்வு துறையில் உள்ள மனுபாத்ரா இதன் மூலம் சட்டக் கல்வி பயிற்சியிலும் கால்பதித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி