வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: துணை வேந்தர் ராமசாமி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2018

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: துணை வேந்தர் ராமசாமி அறிவிப்பு

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில் 12 இளநிலை வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 18ம் தேதி இணையதளம் மூலமாக தொடங்குவதாக தெரிவித்தார். (www.tnau.ac.in) என்ற இணையதள முகவரியை தெரிவித்த அவர் ஜூன் 17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவித்தார். கல்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படுகிறது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது. இணையதளத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி தொடங்குகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லூரிகள் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி