ஒன்பதாம் வகுப்புக்கு மறுதேர்வு நாளை மறுநாள் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2018

ஒன்பதாம் வகுப்புக்கு மறுதேர்வு நாளை மறுநாள் துவக்கம்

திருப்பூர்:ஒன்பது வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு,நாளை மறுதினம் (23ம் தேதி) துவங்கி மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.இம்மாதம், 11ம் தேதி, ஆறு முதல் ஒன் பது வகுப்புக்கான தேர்வு முடிவு, அந்தந்த பள்ளிகளில் வெளியிடப் பட்டது.
அடுத்தடுத்த மூன்றாண்டுகள் தொடர்ந்து, பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், 9ம் வகுப்பில், கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்த, ஐந்து சதவீத மாணவ, மாணவியர் 'பெயில்' ஆக்கப்பட்டனர்.

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு நாளை மறுதினம் (23 ம் தேதி) முதல், 26ம் தேதி வரை, அந்தந்தபள்ளிகளிலேயே மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.கல்வித்துறை அலு வலர்கள் கூறுகையில், '9ம் வகுப்பில் தோற்று விட்டோம் என மனசோர்வு அடைந்து, துவண்டு விடக் கூடாது என்பதற்காக, கல்வியாண்டு துவங்கும் முன்பே, தேர்வு வைக்கப்படுகிறது.

இதில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், வரும் கல்வியாண்டிலேயே பிற மாணவர்களுடன் இணைந்து, பள்ளிக்கு செல்ல முடியும். எனவே, மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்,' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி