அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2018

அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என்.ராஜேந்திரனைதமிழக கவர்னரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். என்.ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாறு பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் ‘தமிழ்நாட்டில் தேசியம்’ மற்றும் ‘சுவதேசியம்’ ஆகிய 2 நூல்களை எழுதி இருக்கிறார்.27 ஆண்டுகள் கல்வித்துறையில் கற்பித்தல் மற்றும் நிர்வாகத்திறமையில் அனுபவம் பெற்றவர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மற்றும் இயக்குனராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். பாரதிதாசன் பள்ளி நிர்வாகத்தின் நிறுவனர் ஆவார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுவில் 2008 மற்றும் 2015-ம் ஆண்டு என 2 முறை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.ராஜேந்திரன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி