இரண்டு மாவட்டங்களில் இணையதள முடக்கம் ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2018

இரண்டு மாவட்டங்களில் இணையதள முடக்கம் ரத்து.

தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இணையதள சேவையை முடக்கிய தமிழக அரசு நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இணையதள சேவையை முடக்கி உத்தரவிட்டது.


இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏன் இணையதள சேவை முடக்கப்பட்டது என கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதளசேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி