Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வீடு வீடாக சென்றது வீணா? - அரசின் அறிவிப்பால் தொடக்கக்கல்வித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி...

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய  குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால்  அரசுப்பள்ளிக்கு வர  வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால்,  புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால்  தலைமையாசிரியர்மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணம் கூற வேண்டுமாம் இப்படியும் ஒரு  ஆணை..தனியார் பள்ளியில் அரசே சேர்க்க ஆணையிடுகிறதெனில் விடுமுறை  நாட்களில்மாணவர்களை சேர்க்க வீடு வீடாக சென்று அரசு பள்ளியில் சேர்க்க  சொல்லி சேர்க்கை பேரணிகள்  பிரச்சாரங்கள் செய்வதெல்லாம் வீணா. தனியார்  பள்ளிகளைவிட அரசு பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளைவிட  அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கற்பித்தாலும், கற்றல்  கற்பித்தல் பணிகளுக்கு சொந்த பணத்தை போட்டு சில வசதிகளை அரசை  எதிர்பாராமல் தாமே உருவாக்கிக்கொடுத்தாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள  மோகத்தால்  பணமுள்ளவர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்லும் இன்றைய  காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத  பணமில்லாதவர்கள் வசதியற்றவர்கள் தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் இந்த அரசு தடுக்கின்ற வகையில் நீ உன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை அரசே தனியார் பள்ளிகளுக்குபணத்தை செலுத்தும் என்று கூறுவது ஏற்புடையதா .எங்கேயாவது இப்படி நடக்குமா?? தனியார் பள்ளியில் மாணவர்கள்  சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்  என்றும் ஒரு ஆணை.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லைஎன்றால் அதற்கான காரணம் கேட்கப்படும் என்றும் ஓர் ஆணை.. இரண்டு ஆணைகளையும் போடுவதும் ஒரே நபர்!!! என்னன்னு சொல்றது இதை..தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு செலுத்தும் பணத்தைஅரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு  பயன்படுத்துமேயானால்அரசு பள்ளி நலன் பெறுமே!! தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை அரசு பள்ளிகளில் இந்த அரசால் ஏற்படுத்தி தரஇயலாதா.. பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பல தனியார் பள்ளிகளில் போதிய வசதிகளே இல்லாத பள்ளி. அப்பள்ளிகளைவிட கற்றல் கற்பித்தலில், நம் பள்ளி 100% உயர்வானது.  நம் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் போதிய கல்வி தகுதியோடு உள்ளவர்கள்.

கற்றல் கற்பித்தலில் சிறந்தவர்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படியா உள்ளது.. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது. 10&12ம் வகுப்பு தேர்ச்சியா.. அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா.. வாசித்தல் திறன் ஆய்வு உண்டா. அரசுப்  பள்ளிகளில் பராமரிக்கும் ஏகப்பட்ட பதிவேடுகள் அங்குண்டா.. ABL SALM ALM முறைகள் உண்டா.. இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசு பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு????

2 comments

  1. இப்படி ஒரு மகத்தான திட்டம் தயாரித்த அம்மா மற்றும் உயரதிகாரிகளைப் பார்த்து நாங்கள் கேட்பது வாரத்தில் மூன்று அரை நாள் என்று போஸ்டிங் போட்டீர்களே எங்கள் குடும்பத்தை நாசம் செய்வதற்காகவா! இந்த 7700 ஐ வைத்து என்ன செய்ய முடியும்? எந்த அரசும் மக்களுக்கு நல்லதைச் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. இப்படி 16549 குடும்பங்களையும் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் செய்வதற்காக அல்ல. இதில் வயது அதிகமானோரே அதிகம் பணிபுரிகின்றனர். இப்போது 6 வருடங்களுக்கும் மேல் வாழ்க்கை வீணாகிவிட்டது. இனி பிள்ளைகளை வைத்துக் கொண்டு எங்கு செல்வது? ஏன் இப்படி ஒரு போஸ்டிங் தேவையா? உங்களுடைய கணக்கிற்கு நாங்கள் தான் கிடைத்தோமா? மானியக்கோரிக்கையில் 2 மணி நேரப்பணி என்று அமைச்சர் கூறுகிறார். கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துதான் கூறுகிறாரா? கணிப்பொறி ஆசிரியர்கள் அனைத்து நலத்திட்டப்பணிகள் (எமிஸ், பவர்பைனான்ஸ், ஸ்காலர்ஷிப், தேர்வுக்கான நாமினல் ரோல், பஸ்பாஸ், 11,12 பிராக்டிகல், தினந்தோறும் கேட்கப்படும் புள்ளி விவரங்கள், மெயில் என எவ்வளவு வேலைகள் இரவு பகல் பாராது) செய்து கொடுத்து கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போனது? வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ள இளைஞர்கள் யாராக இருந்தாலும் குறைந்த பட்ச சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை அரசு நம்மை எப்படியாவது காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் இப்படி தற்காலிகப்பணிகளில் சேர்ந்து பிறகு நிரந்தரப் பணிக்கு வந்துள்ளனர். அந்த நம்பிக்கையில் வந்த பகுதி நேர ஆசிரியர்களை வஞ்சிக்கும் விதமாகவே வேறு எந்த அரசும் செய்யாத இந்த மாதிரியான மோசமான செயலை இந்த அரசு செய்கிறது என்பதே வேதனை. மற்றவற்றிற்கெல்லாம் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக என்று கூறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த பணியிடங்கள் கேரளா போன்ற எத்தனையோ மாநிலங்கள் நிரந்தரப் பணியிடங்களாகவும், குறைந்த பட்ச ஊதியமாக 18000 -க்கும் மேலும் கொடுத்து வருகின்றனர் என்பது இந்த அமைச்சருக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் வயிற்றில் தயவு செய்து அடிக்காதீர்கள். சென்ற வருடம் இதே காரணத்தைக் கூறி 7000 ரூபாயிலிருந்து 700 ஏற்றிக் கொடுக்கப்பட்டது. இருக்கும் பயங்கரமான விலைவாசி உயர்விலிருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் உள்ள நிலையில் இந்த ஆண்டு அதற்கும் வழியில்லை. தயவு செய்து எங்களை வேலையைவிட்டாவது விரட்டிவிடுங்கள். நீங்கள் செய்த புண்ணியமாகவாவது போகட்டும்! எங்கள் வாழ்க்கையில் 6 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் கெடுத்த வாழ்க்கையாக இருந்துவிட்டு போகட்டும்!

    ReplyDelete
  2. ஏன் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது என்று கேட்டால் எந்த விளக்கமும் சொல்லாதீங்க. ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் ஏன்டா நீங்களே தனியாரில் சேர்க்க அரசாங்க பணத்த கொடுத்திட்டு இங்க வந்து கேள்வி கேட்கறீங்களே என்று அந்த முட்டாள்களிடம் விளக்கம் சொல்லாதீர்கள்.காரி துப்புங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives