அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2018

அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை

எம்எல்ஏ செம்மலை (மேட்டூர்): அரசு பள்ளிகளில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என்று கூறுகிறார்.
அந்த நிலைமை வரக்கூடாது. சில அரசு பள்ளிகளில் 10 மாணவர்கள் தான்  படிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆட்சியில் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.

மற்றபள்ளிகளில் 10 மாணவர்களுக்கு அதிகமாகசேர்க்க பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 10 வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள 850 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். எனவே, பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.

1 comment:

  1. ஏற்கனவே தனியார் பள்ளிக்கு போகின்றனர்.மீதி உள்ள மாணவர்களையும் 25% பேருக்கு தனியாருக்கு போங்கடா அரசு பள்ளியையைவிட அங்குதான் நல்ல கல்வி கிடைக்கும் என்று அரசு பணத்த எடுத்து கொடுக்க ரெடியா இருக்கிங்க.அப்ப அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய தூண்டுகோளே நீங்கதான் என்று நீங்க மட்டும்தான்டா ஒத்துக்காம பள்ளியை மூடும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ஒன்னாம் நம்பர் முட்டாள் மாதிரி பேசுறீங்கடா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி