ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG - உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2018

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG - உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்


*மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.

*முதல்வரின் உத்தரவுபடி அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு ரூ.9 கோடியில் பயோமெட்ரிக் முறை திட்டம் நிறைவேற்றப்படும்*

*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்

*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.


பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்

*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.




*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.


*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.


*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்


சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

5 comments:

  1. வரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன்? இது நல்ல ஆட்சியின் அடையாளமா? எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க? இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம்???????¿???¿

    ReplyDelete
    Replies
    1. பிராடு செங்கோட்டையன்.

      Delete
    2. Ematru per vazhi....nalla irukamaringad.

      Delete
    3. Ematru per vazhi....nalla irukamaringad.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி