NET தேர்வுக்கான இலவசப் பயிற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2018

NET தேர்வுக்கான இலவசப் பயிற்சி!


நெட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி ஜூன் 2 முதல் 24 வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும், கல்லூரி,பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும், செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ நடத்திவரும் நெட் தேர்வு இந்தாண்டு ஜூலை 8ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதுவரை மூன்று தாள்கள் இருந்த நெட் தேர்வில், இந்தாண்டில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான இலவச பயிற்சி சென்னையில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவு மாணவர்கள் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப விநியோகம்நேற்று (மே 21) முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பப் படிவத்தை www.unom.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனச் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

இயக்குநர் (பொறுப்பு)
மாணவர் ஆலோசனை மையம்
சென்னை பல்கலைக்கழகம்
சேப்பாக்கம் வளாகம்
சென்னை - 600 005.
தொலைப்பேசி எண் 044 - 2539 9518

5 comments:

  1. *✈ June 9 முதல் 17-ம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு தஞ்சாவூரில் ஆட்கள் தேர்வு: +2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்✈*
    >

    ✈https://kaninikkalvi.blogspot.in/2018/05/june-9-17-2.html?m=1

    🌍More News Visit- kaninikkalvi.blogspot.in

    Add Your Whatsapp Group: 8807414648

    ReplyDelete
  2. Chennai mattum thana? Madurailaum net coaching kuduthal Nalla erukkum. Phone potta atten pannava mattranga.

    ReplyDelete
    Replies
    1. Download application through website and apoly

      But kalviseithi didn't give link as correct link

      Delete
  3. UGC NET EXAM PASSED PANNI SIX YEARS ARATHU ENNUM GOVT JOB POdala appuram en exam nadathuronga

    ReplyDelete
  4. intha arasu seivathu migavum muttal thanam.chennai students mattum net coaching pona pothuma. matta dist.makkal engu sellavendum.talamaiseylagam chennai ill erpathinalthana.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி