சட்டமன்றத் தொடரில் விடியல்: கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2018

சட்டமன்றத் தொடரில் விடியல்: கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்

கல்வி அமைச்சரின் கருணைக்கு 
RTE - Act ல்  சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் : எதிர் வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற எதிர்பார்ப்பு.
2018 ஜுன் மாதத்தில்
நடக்கும் தமிழக சட்டப் பேரவையில் TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.


 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டியவாறு உள்ளனர்.


ஆயினும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில் இதுவரை உள்ளனர். எதிர் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் பணி நியமனம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக  கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக TNTET நிபந்தனைகளில்  சிக்கித தவித்து   வரும்  TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு  ஒரு தவிர்ப்பு ஆணை மூலமாக நல்ல விடியல் கிடைக்கும் என காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


காரணம் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கூறுவது
2019 ஏப்ரல் மாதத்திற்குப்  பிறகு இந்தவகை ஆசிரியர்களின் நிலையும் பணியும்....??? 
( கேள்விக்குறி )
என்பதை கடந்த பல நாட்களாக பல ஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.


23/08/2010 க்குப் பிறகு
கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்கள் இன்றும் ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி நியாயமாக கிடைக்க வேண்டிய பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இன்றுவரை பணியாற்றி வருகின்றனர்.


தமிழகத்தில்
பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...

ஒரு சில ஆசிரியர்களுக்கு...


* வளரூதியம் இல்லை.


* ஊக்க ஊதியம் இல்லை.


* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.


* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.


* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.


* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.


* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.


* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.


* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.


* வரையறை விடுப்புகள் இல்லை.


₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.


* கடைசியாக வந்த  ஊதியக்குழு தரப்படவில்லை.


இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.


மாண்புமிகு
தமிழக முதல்வர் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் கருணை உள்ளத்தோடு, இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும் நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.


இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கை முடிவில் மறு பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300 பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து, ஒரு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என  மாண்புமிகு தமிழக கல்வி  அமைச்சரிடம் கடந்த மாதம் சுமார் 50 ஆசிரியர்கள் மனு கொடுத்து இருந்தனர்.


அந்த மனுவிற்கு  மேலும் வலு சேர்க்கும் விதமாக சில
முதன்மை அமைச்சர்கள் மற்றும் சுமார் 15 சட்ட மன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களும் இணைத்து மாண்புமிகு கல்வி அமைச்சரின் மேலான கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.


அப்போது " இந்த  கோரிக்கை நியாயமானது எனவும் விரைவில்  நல்ல  முடிவை  தமிழக அரசு  அறிவிக்கும்  அதுவரை காத்திருங்கள் " என்று   மாண்புமிகு கல்வி அமைச்சர்  கூறியிருந்தார்.


2018 ஜுன் மாதத்தில்
நடக்கும் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் கல்வித் துறை சம்மந்தமான  மானியக்  கோரிக்கை அறிவிப்புகளில் , இந்த பணியில் உள்ள நிபந்தனை ஆசிரியர்களுக்கு TETலிருந்து முழு விலக்கு தந்து அரசாணை வெளிவரும் என எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்த சுமார் மூவாயிரம் ஆசிரியர்களுக்கும் காத்து கொண்டு உள்ளனர்.


தமிழக அரசின் கல்வித் துறை இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக  TET லிருந்து பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்தால் சுமார் 3000 ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையை  வைத்து வருவது  கூடுதல் தகவல்.


எதிர் வரும் சட்ட மன்ற கூட்டத்தில் பணியில் உள்ள இடைநிலை மற்றும்  பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மாண்புமிகு கல்வி அமைச்சர்  அவரது கருணைப் பார்வையில் உள்ளது.

*

 எழுத்து : ஆ.சந்துரு ,  கோவை ஒருங்கிணைப்பாளர், தமிழக அரசு உதவிபெறும் பள்ளி நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பு, கோவை.

10 comments:

  1. Ithu thevaiyana onru than.....

    ReplyDelete
  2. Ellorukum villaku kuduthal enna nallathu seivatharku thane govt kettathu seivatharka ivanga manasula samithan sellanum

    ReplyDelete
  3. மாநில தகுதிதேர்வில் TNSET 2018 ஏற்பட்ட குறைகளை விவாதிக்க,
    https://www.pagalguy.com/discussions/tnset-2018-issues-4547354330398720

    ReplyDelete
  4. என்ன கொடுமை @ என்று தனியும் இந்த நிலை.

    ReplyDelete
  5. நிச்சயம் நமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்

    ReplyDelete
  6. எத்தனை சட்ட‌மன்ற கூட்டுத்தொடருக்கு தான் காத்திருப்பது......

    ReplyDelete
  7. இதெல்லாம் சமூகப்பாதுகாப்பு துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பொருந்தாது. அவர்கள் எல்லாரும் அசிடெண்ட் சூப்பர் டென்ட், நன்னடத்தை அலுவலர் போன்ற பதவிகளுக்கு உயர்வு அடைந்துள்ளனர்.

    ReplyDelete
  8. ஆசிரியர் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டியது தானே

    ReplyDelete
  9. உங்கள் கருத்துக்கள் நியாயமானதாக இருக்கும்பட்சத்தில் 2013ஆம் ஆண்டு முன் ஆசிரியர் தகுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்து பணி வாய்ப்பு கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கும் எங்களது குடும்பத்திற்கும் நீங்கள் சொல்லும் பதில் என்ன

    ReplyDelete
  10. ellavattirukkum karanam intha arasin kollgaithan tet complete panniyavarkalaivaithu seniorty or age adipadayil panni amarthinal ellarum nichyamaha oru nall panivaippu pettukolvarkaley.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி