RTE - ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2018

RTE - ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்

"தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) நடக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது,"என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஆர்.டி.இ.,யின் கீழ் நுழைவு வகுப்புக்காக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செய்ய, இன்று (மே 18) கடைசி நாள். கல்வித்துறை, தொண்டு நிறுவனங்கள்சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுக்கு நல்ல பலன் கிடைத்தது.

இதுவரை 8,500 க்கும் மேல் விண்ணப்பம் பதிவு செய்து மதுரை முன்னிலையில் உள்ளது.6950 விண்ணப்பங்களுடன் சென்னை 2ம் இடத்திலும், 6784 விண்ணப்பங்களுடன் வேலுார் 3ம் இடத்திலும் உள்ளன. மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 723 பேர் பதிவு செய்துள்ளனர். இவை பரிசீலிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 28ல் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்நிகழ்வு பெற்றோர் முன்னிலையில் வெளிப்படையாக நடக்கும். இதில் தவறு நடப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி