WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2018

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?


இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும்புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும். இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு(WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

இந்த வசதி தொழில் செய்யும் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில்தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு வாட்ஸ்அப் ஆன்லைன் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது வந்துள்ள ரீடவுன்லோடு எனும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் செயலியின் புதிய ரீடவுன்லோடு அம்சம் பொறுத்தவரை 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக பயனர்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையா அப்டேட் செய்யமுடியும்.

இந்த ரீடவுன்லோடு அப்டேட் பொறுத்தவரை வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,விரைவில் வாட்அப் செயலியில் புதிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. *✈ June 9 முதல் 17-ம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு தஞ்சாவூரில் ஆட்கள் தேர்வு: +2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்✈*
    >

    ✈https://kaninikkalvi.blogspot.in/2018/05/june-9-17-2.html?m=1

    🌍More News Visit- kaninikkalvi.blogspot.in

    Add Your Whatsapp Group: 8807414648

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி