நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் புதிய கல்விமுறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2018

நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் புதிய கல்விமுறை!

பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் 16.60 கோடி குழந்தைகளுக்கு புதிய கல்விமுறையை 2018-19 கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரைவு ஆவணம் தயார்செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கடந்த மாதம் கருத்துகளை கேட்டுப் பெற்றுள்ளது.

அரசுகளின் பங்களிப்பு என்ன?: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பும், மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் புது தில்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் 60:40 விகிதத்தில் பங்களிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு 90:10 விகிதத்தில் பங்களிப்பு எனவும், சண்டீகர், அந்தமான்-நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றுக்கு மத்திய அரசே 100 சதவீதம் நிதி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பயன் பெறும் வகுப்புகள்: இத்திட்டமானது ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை முழுமையாக அமல்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தாலும்இப்போதுள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.

"சமக்ர சிக்ஷா அபியான்': பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரீய மாத்யமிக் சிக்ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய 2 திட்டங்களையும் இணைத்து "சமக்ர சிக்ஷா அபியான்' (எஸ்எம்எஸ்ஏ) என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2001- ஆம்ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக் கற்றலும், 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெற்றது.இதில், 6-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளைக் கட்டுவது, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிதல், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம் பெற்றிருந்தன. 2012-இல் இத்திட்டம் முடிவடைந்தாலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.இதேபோல, 2005-ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அமல்படுத்தப்பட்டது. இதில், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கற்பித்தல் முறையை மேம்படுத்தி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வியை உறுதி செய்தது. இப்போது, இரு திட்டங்களையும் இணைத்து நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வி செயல்பாடுகள் சமக்ர சிக்ஷா அபியானின் கீழ் மேற்கொள்ளப்படும்.ஏற்கெனவே எஸ்எஸ்ஏ மற்றும் ஆர்எம்எஸ்ஏ திட்டங்களுக்குத் தனித்தனியே அலுவலர்கள் நியமித்து மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில், இரண்டும் ஒன்றாக இணைக்கப்படுவதால் இவ்விரு திட்டங்கள் சார்ந்த அலுவலகங்களும் இனி கலைக்கப்படும். அவற்றுக்குப் பதிலாக "சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தை செயல்படுத்த புதிய அலுவலர்களைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். ஒரே அலுவலகம் செயல்படும். கல்வித்துறை அமைச்சரைத் தலைவராக கொண்ட ஆளுகை குழுவும், பொதுக் கல்வித் துறை செயலாளரைக் கொண்ட நிர்வாகக் குழுவும் இடம் பெறும். புதிய குழுக்களுக்கான அதிகாரங்களும், கட்டுப்பாடுகளும் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு மாநிலங்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்படி?: முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரைத் தலைமையாகக் கொண்டு, தலைமைச் செயலர், பள்ளிக் கல்விச் செயலர் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூலம் மாநில அமலாக்க அமைப்பை உருவாக்கி, மாநில திட்ட இயக்குநர் நியமனம் செய்து, பள்ளிக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குத் தனியாக ஒரு இயக்குநர் (எஸ்சிஇஆர்டி), பள்ளிகளின் மேம்பாடு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு தனி இயக்குநர், மாணவர்களின் உரிமைகள் பாதுகாப்புக்கு தனிஆணையம் அமைக்கப்படும். தொழில்நுட்பக் குழுவும் ஏற்படுத்தப்படும். இந்த மாநிலக்குழுவின் நிர்வாக வடிவமைப்பின்படியே, மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் குழுக்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒதுக்கீடு எவ்வளவு?: இத் திட்டத்துக்காக 2018-19ஆம் ஆண்டுக்கு மட்டும் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.1427.30 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தின் பங்களிப்பான 40 விழுக்காடு தொகையும் சேர்த்தால் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இத்திட்டத்துக்கு முழுமையான ஒப்புதல் அளித்தவுடன் அதனை மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சகத்துக்கு முறைப்படி தெரிவித்து தமிழகத்துக்கான முழு மத்திய நிதி ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

8 comments:

  1. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
    மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

    நாள்: 25/06/2018
    இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.

    இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
    *துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*

    இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
    இப்போது தெரியபடுத்துகிறோம்.
    இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
    கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்

    🔥 TET சான்றிதழ் நகல்மூன்று

    🔥பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு

    🔥ஆபிஸ் கவர் ஒன்று

    🔥உறுப்பினர் பதிவு மற்றும் தொகுப்பூதியத்திற்கான கட்டணம் ரூபாய் 125
    கொண்டுவரவேண்டும்


    💥💥💥💥💥💥💥💥💥💥
    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

    இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    8778229465


    வடிவேல்சுந்தர்
    மாநில தலைவர்
    8012776142

    சிவக்குமார்
    மாநில செயலாளர்
    ( ஊடகபிரிவு)
    9626580103

    உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
    Replies
    1. Unaku 125 koduthu busku 1000 selavalichu sapaduku 200 selavalichu pathathathuku un elavuku 500 koduthu govt athira poratam pana varamatom

      Delete
    2. சிந்தித்து செயல்படுங்கள் தோழமைகளே...

      அரசிடம் இருந்து நல்ல முடிவு வருவதற்குள் மடத்தனமான முடிவு எடுக்க வேண்டாம்...

      கண்மூடித்தனமாக நம்பாதீர்

      Delete
  2. செங்கோட்டையன் புத்தி சுவாதீனம் இல்லாத மாதிரி மாத்தி மாத்தி இரண்டு வருசமா பேசிக்கிட்டு வரான்.அவன் என்னா பேசுறான்னு அவனுக்கும் தெரியல.நமக்கும் தெரியல.துறை சார்ந்தவர்களுக்கும் தெரியல.அதனால இவன நம்பி இனிமேல் நீங்க போராடுறது எனக்கென்னமோ வீண் முயற்சி என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. Wei change panrenu sonathukapuram intha madathanamana poratathuku yarum poga vendam .2013ku 2017ku niranthara solution kidaika poguthu.intha 2013 porata group oru selfish.enga antha vadivelu kita weitage vendamnu sola solunga parpom.intha poratathuku poravanga unga thalayula neengale mana alli podrathuku samam

    ReplyDelete
  4. Mulu munurimai kekuriye vekama ila 13 fail ahagi 17 la job ilama padichu pass panina nanga elam ilichavayangala. Makale intha poratam 3 perukaga nathum poratam .moneya unga kolanthiku ethavathu vangi koduthu happya irunga

    ReplyDelete
  5. Sandai podathinga, posting kaga again exam eluthanum, sengs solliduchii

    ReplyDelete
  6. Tet passed candidates again exam eluthanuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி