10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2018

10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு!

பத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன.இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பலலட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை. எனவே, 'ஆசிரியர்கள், தங்கள் பதவியைகாப்பாற்றிக்கொள்ள, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை உயராவிட்டால், அந்த பள்ளிகளை மூடுவது குறித்து, அரசு பரிசீலிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

 ஆகஸ்டில் மாணவர் சேர்க்கை முடிய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு முன்னும், பின்னும் அறிக்கை தர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் மூடப் படுவதை தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரி யர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2 comments:

  1. ⚫⚫⚫⚫⚫⚫⚫
    முக்கிய அறிவிப்பு!

    போராட்டம் ரத்து.....

    25/06/2018 சென்னயைில் திட்டமிட்ட போராட்டத்திற்கு, காவல்துறையினரின் அனுமதி கிடைக்காததால்
    அன்றைய தினம் நடக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி