சட்டப்பேரவை 110 விதியின் கீழ் இன்று முதல்வர் பழனிசாமி புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2018

சட்டப்பேரவை 110 விதியின் கீழ் இன்று முதல்வர் பழனிசாமி புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு

10 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி புதிய திட்டங்களை அறிவித்தார்.
நடப்பாண்டில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க ரூ.20.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தை நல ஒப்புயர்வு மையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

காஞ்சி, நீலகிரி, நாகை மாவட்ட செவிலியர் பயிற்சி பள்ளிகளில் மாணவியர் விடுதி கட்டப்படும். 985 துணை சுகாதார மையங்கள் ஒருங்கிணைந்த சுகாதாரம், நலவாழ்வு மையமாக உயர்த்தப்படும். மேலும் மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.22 கோடியில் சி.டி.ஸ்டிமுலேட்டர் கருவிகள் வழங்கப்படும் என முதல்வர் பேரவையில் அறிவித்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.60 கோடி மதிப்பில் யோகா, இயற்கை மருத்துவ மையம் அமைக்கப்படும். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.42.84 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2 comments:

  1. CM sir Eppadiyavathu
    TET kku posting
    announce pannirunga sir
    Teachers munnadi
    nenga nichchayama samiya theriyuvinga

    ReplyDelete
  2. பல ஆண்டுகளாக கணினி பயிற்றுநராக பணிபுரிந்து, சிறந்த முறையில் பணியாற்றியும், பணிப்பதிவேட்டில் உயா்கல்விக்கு ஊக்க ஊதிய உயா்வு பெற்றும், அனுபவமிக்க, ஆற்றல் நிறைந்த, சிந்தனை நிறைந்த பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி பயிற்றுநா்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடுமாறு முதலமைச்சா் அய்யா அவா்களுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி