1,200 அரசு பள்ளிகளை செப்டம்பருக்குள் இணைக்க திட்டம்: தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2018

1,200 அரசு பள்ளிகளை செப்டம்பருக்குள் இணைக்க திட்டம்: தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்

மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது. அத்துடன், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. செப்டம்பருக்குள், 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யவுள்ளனர். இதில், சேலத்தில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், ரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில், 2,800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது. இதனால், அந்த எட்டு மாவட்டங்களில், கடந்த, 21ல் நடந்த தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில், மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு, தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

15 comments:

  1. rip AIADMK 2019
    kasuvagittu vote potta parathesigalala naagatha bhathikkappadurom

    ReplyDelete
  2. மாணவர்கள் குறைவு காரணமாக எந்த ஒரு பள்ளியும் மூடக்கூடாது.மேலும்
    மாணவர்கள் குறைவிற்கு அரசாங்கம் RTE சட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களின் கல்வியை அரசாங்கம் பறிக்க நினைக்கிறது

    ReplyDelete
  3. ஒரு பள்ளியை மூடினால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாது. மேலும் அந்த பள்ளியை எப்போதும் திறக்க முடியாது

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Govt school teachers have to do their wrk properly otherwise district to district transfer is unavoidable

    ReplyDelete
  7. நண்பர்களே 80000 மாதம் ஊதியம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தன் பிள்ளை எப்படி படிக்கின்றான் என்று 8000 மாத ஊதியம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியரிடம் கேட்கும் நிலை என்று தமிழகத்தில் மாறுமாே அன்று தான் அரசு பள்ளி குழதைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. Sir correct .do you one thing sir my opinion is when the government stongly say the order to all government staff those compalsury our child's join in government schools only possible

      Delete
  8. Many teachers are not dedicated to their all are gaining salary without working

    ReplyDelete
  9. Aaga moththam tet LA pass pannavangaluku posting poda maatinga?

    ReplyDelete
  10. Paper1cv epponu therinja sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி