அரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2018

அரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம்ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ஒரு வாரமாகநடந்தது. இந்த முறை, மாணவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு, ஆசிரியர்களின் தேவையை அறிந்து கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டது.இதற்காக, கல்வி மேலாண்மை தகவல் தொழில்நுட்ப திட்டமான, 'எமிஸ்' வாயிலாக, ஆதார் விபரங்களுடன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை; 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்வீதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

இதில், 5.64 லட்சம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 16 ஆயிரத்து, 114 ஆசிரியர்களே தேவை. ஆனால், 33 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதனால், கூடுதலாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களின் விபரங்கள், மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டன. அவர்கள் அனைவரையும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க, பணி நிரவல் கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது. ஆனால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, போதுமான அளவுக்கு பள்ளிகளில் காலியிடங்கள் இல்லை.இதனால், காலை, 9:00க்கு வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள், இரவு, 10:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் காத்திருந்தனர்.மாநிலம் முழுவதும், 2,500 காலியிடங்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, நள்ளிரவில், உபரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.அதிலும், 2,500 ஆசிரியர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட்டது. மீதமுள்ள, 14 ஆயிரத்து, 500 ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் வழங்க முடியாததால், தற்போது அவரவர் பணியாற்றும் பள்ளிகளிலேயே, பணியை தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.'இந்த சிக்கலுக்கு தீர்வு காண, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

37 comments:

  1. 17000 upari 12000 part time teacher appo gn evargalukku Ellam summa salary vazhangutha

    ReplyDelete
  2. 25%தனியார் பள்ளிகளில் சேர்க்கையை கட்டுபடுத்தி,திறன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கினால் போதும் எல்லாம் சரியாகிவிடும்
    அரசு பள்ளிகளில் படிப்பதற்கு இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும்.இது அரசின் கடமை அப்போதுதான் சம்பளம் வழங்க முடியும் வரிப்பணம் வீணாக்காமல் தடுக்க முடியும்

    ReplyDelete
  3. Innum 10 varusathukku postinge kidaiyaadhaa

    ReplyDelete
  4. Innum 10 varusathukku postinge kidaiyaadhaa

    ReplyDelete
  5. *வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்......

    ReplyDelete
  6. பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையைல் அமைச்சர்4500 பட்டதாரி பணியிடங்கள்,3400 முதுகலை ஆசிரியர்பணியிடங்கள்,800கணினிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.இபொழுது 17000 ஆசிரியர்கள் உபரி என்கிறார்கள்.இன்னும் 10 வருடங்களுக்கு ஆசிரியர் நியமனம் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Pvt school open panna kasu vankitu govt school mukkiyathuvam tharala so atha problem panam thinnika yallarum avanum sari ella

      Delete
  7. Pvt school ku approved kotuthutu govt school mukkiyathuvam tharala so atha problem.. Govt school la peticha 30% munnurumai kotunga govt school la peticha govt job nu sollunga kantipa school students increase akum tet pass pannavangalukku job kitaikkum but ethu natakkuma.... Patikatha orutha than payan Pvt school la peticha kauiravam nenaikara atha apparum yappti govt school mukkiyathuvam therium

    ReplyDelete
  8. Ini govt posting podave matanunga

    ReplyDelete
  9. Tetஐ ரத்து செய்.pass செய்தவர்களுக்கே வேலையை காணுமா. இதுல மேன்மேலும் exam எதுக்கு. கஜானாவை நிரப்புவதற்கா?எங்கள் வயிற்றில் அடித்து யார் வயிற்றை நிரப்ப போகிறது இந்த அரசாங்கம்.

    ReplyDelete
  10. 2012 il TET appointment 18000 persons thana excess

    ReplyDelete
  11. Panam pesuthu
    Unmaiyakka eathuvam inga nadakkala
    Neraya posting maraikkappattu illainu arivikka pattullathu
    Asiriyar sangam asiriyar patrakkurai irukkunnu soldranga...
    GT Trb vacancy illannu soluthu
    Evana numporathu...
    Motthathulla nambiruntha aththanai perum nasama poga vendiyathuthan...

    ReplyDelete
  12. தனியார் பள்ளிகளை மூட சொல்லி
    போராட்டம் பன்னுவோம் அனைவரும்
    தயாராக இருங்கள்

    ReplyDelete
  13. One year la yevalo teachers retired aguranga avalo perukum vacancy fill pananumla ithuvara pgtrb arivikala apa oru pgt kuda retired agalaya intha yearla.private sector ivalo kuduka solli Yaru ketanga. Publica ilaye panatha vankitu private sectorku govt dhana yedam kuduthathu

    ReplyDelete
  14. தனியார் பள்ளிகளை மூடுங்கள். எல்லாம் சரியாகிவிடும். கேரளா மாநிலம் போல தனியார் பள்ளிகளை மூடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இது உண்மையா விளக்கத்தை கூறுங்களேன்

      Delete
  15. பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் 17000 பேர். ஆனால் அரசு கலை கல்லூரிகளில் புதிதாக 5000 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் கஷ்ட படுகிறார்கள் இதை அரசு யோசிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. There is no that much vacant in Government Arts College...

      Delete
  16. athenna engineering college la 20 students ku oru teacher ana school la 35 perukku oru teacher, enna kanakku, appo 5 classes irukura high school la oru class ku 10 peru mattume irundha, enna pannuvinga, 50 perukku 2 teacher mattum poduvingala, loosu thanama irukku, oru class ku 1 teacher venunalum oru period ku 5 teacher venum, loosu da neenga, total students ku eppadi teacher ratio poduvinga,

    ReplyDelete
  17. Responsibilities of excess teacher appointment will be fixed concern previous Education Minister, Director of School education, all District Educational Officers and Head Masters of Govt School of Tamil Nadu state. Should take necessary action against them.

    ReplyDelete
  18. ஒரு பக்கம் 17,000 ஆசிரியர் பணியிடங்கள் அதிகம்இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். மறுபுறம் விரைவில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்ற செய்தி.என்னவொரு குழப்பம்.Very good government.

    ReplyDelete
  19. ஒரு பக்கம் 17,000 ஆசிரியர் பணியிடங்கள் அதிகம்இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். மறுபுறம் விரைவில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்ற செய்தி.என்னவொரு குழப்பம்.Very good government.

    ReplyDelete
  20. Pongada neengalum government um!

    ReplyDelete
  21. Mudala 13000 teacher nu sonanga athellam enna atchu

    ReplyDelete
  22. Lusungala first government scl teacher education department staf nga avanga avanga pilaingala gvrment scla serungada aprm

    ReplyDelete
  23. கஜினி சூர்யா போல கல்வி அமைச்சர்.. தான் என்ன பேசுகிறோம், செய்கிறோம் என்று அனைத்தையும் மறந்து விடுகிறார்... முதலில் 13000 ஆசிரியர் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளது என்று 3 நான்கு மாதங்களுக்கு முன்பு கூறினார்... தற்போது 17000 ஆசிரியர்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே...
    .நாசமா போச்சு 5 வருசமா tet la pass panitu வேலைக்காக போட்டி வாழ்க்கையே வீனா போச்சு......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி