தொடக்க கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' ஜூன் 18 முதல், 'ஆன்லைன்' பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2018

தொடக்க கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' ஜூன் 18 முதல், 'ஆன்லைன்' பதிவு

தொடக்க கல்வி ஆசிரியருக்கான, 'டிப்ளமா' படிப்பில் சேர, வரும், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடப்பு, 2018 - 19ம் ஆண்டுக்கு உரிய, தொடக்க கல்வி டிப்ளமா படிப்புக்கு, ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள்,www.tnscert.org என்ற இணையதளத்தில், வரும், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரைவெளியிடப்படும்.

மாணவர்கள் தங்கள் விபரங்களை, ஆன்லைனிலேயே பதிவேற்றம் செய்யலாம்.இதற்கான கட்டணத்தை, ஆன்லைன் முறையில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 250 ரூபாயும், மற்றவர்களுக்கு, 500 ரூபாயும், விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி