புதிதாக 264 பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகளில் துவக்கம் - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2018

புதிதாக 264 பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகளில் துவக்கம் - அரசாணை வெளியீடு.

தமிழகத்தில், 61 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு, 264 புதியபாடப்பிரிவுகளை துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வர் பழனிசாமி, சட்டசபையில், 110 விதியின் கீழ்,
'2018 - 19ம் கல்வியாண்டில், கல்லுாரிகளில், 264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்.


இவற்றை கையாள, 693 உதவி பேராசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும்' என, ஏற்கனவே அறிவித்தார்.அதன்படி, நடப்பு கல்வியாண்டில், 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில்., 71 பிஎச்.டி., என, 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும், அவற்றை கையாள, 693 உதவி பேராசிரியர் பணியிடங்களில், முதலாம் ஆண்டு, 270 உதவி பேராசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி, ஜூன், 22ல், அரசாணை வெளியிடப்பட்டது.

புதிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல், அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லுாரிகளில் வழங்கப்படும். அவற்றை பூர்த்தி செய்து, ஜூலை, 9க்குள், கல்லுாரியில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்லுாரிகள்விபரம் அடங்கிய அரசாணையை, தமிழக அரசின், www.tn.gov.in என்ற இணையதளத்தில், உயர் கல்வித்துறை பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி