ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் 2 -ஆவது நாளாக உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2018

ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் 2 -ஆவது நாளாக உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் 2 -ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம், இந்த அமைப்பினர் வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், ஊதிய முரண்பாடு தொடர்பாக குழு அமைத்து புதிய சமரச திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குழுவின் பரிந்துரையை இதுவரை அரசு வெளியிடவில்லை. இதையடுத்து, திட்டமிட்டப்படி சென்னை சேப்பாக்கத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் தொடங்கினர்.

இதில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் உறுதியாக தெரிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது 50 பெண்கள் உள்பட 250 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் சந்திப்பு: இதனிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது அவர், உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர்க்கக் கேட்டுக் கொள்ள வேண்டுமெனவும், இதுகுறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்பப்படும்' எனவும் ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி