2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2018

2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை

2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் இல்லை -சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்


20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை.

 என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி), கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அரசு மூட இருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தொடக்க கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 29,297 ஆகும். இதில், 85,109 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆசிரியர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினார்கள். இவர்கள் அனைவரும் வேலைக்காக காத்திருப்பவர்கள். இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்கள் வெகுவாக குறைந்துள்ளதால், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை.

கடந்த ஆண்டு 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 2,650 இடங்களில் 1,047 மாணவர்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 மாணவர்களும், 7 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 350 இடங்களில் 66 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.


 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.இவை தவிர, 40 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 3,360 இடங்களில் 459 பேரும், 279 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19,150 இடங்களில் 3,419 பேரும் மட்டுமே சேர்ந்தனர்.

நடப்பு கல்வியாண்டில், 10 உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 47 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு, மூடுவதற்கு அனுமதி வேண்டியுள்ளன. இப்படிப்பட்ட நிலையே அனைத்து மாநிலங்களிலும் உள்ளதால், மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களை பணியிடைப் பயிற்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே, 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி முன் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி, அப்பயிற்சி நிறுவனங்களில் பணியிடைப் பயிற்சி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாவட்டங்களில் பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Superuuu elathayum moodunga

    ReplyDelete
  3. அரசு நிறுவனங்களை ஒவ்வொன்றாக மூடிகிட்மூடி போங்கடா...‌ அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல் அரசும் அதிகாரிகளும் புடுங்கி கிட்டு இருக்கீங்களா.....?

    ReplyDelete
  4. தனியார் பள்ளிகளில் எதையாவது செய்து admissions increase பண்ராங்க..இங்க ஒன்னுதையும் காணோம்

    ReplyDelete
  5. Satta sabaiyum moodivittu phoidunga

    ReplyDelete
  6. நுனிநாக்கு ஆங்கிலம் மட்டும் தனியார் பள்ளிகளின் சிறப்பு தாய் மொழிக்கு இடமில்லை. தாய் மொழியில் படித்து பட்டம் பெற்று தனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்பினால் நீங்கள் தமிழ் வழியில் படித்துள்ளீர்கள் வேலை இல்லை என்கிறார்கள் ஆக மொத்தம் அரசு வேலையும் இல்லை தனியார் துறை வேலையும் இல்லை இது தான் அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் நிலை

    ReplyDelete
  7. நுனிநாக்கு ஆங்கிலம் மட்டும் தனியார் பள்ளிகளின் சிறப்பு தாய் மொழிக்கு இடமில்லை. தாய் மொழியில் படித்து பட்டம் பெற்று தனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்பினால் நீங்கள் தமிழ் வழியில் படித்துள்ளீர்கள் வேலை இல்லை என்கிறார்கள் ஆக மொத்தம் அரசு வேலையும் இல்லை தனியார் துறை வேலையும் இல்லை இது தான் அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் நிலை

    ReplyDelete
  8. Metriculation school ponru yen government school kalilum 1to 12 varai english medioam thuvanga kudathu minimam feesl thuvangalame ,,,
    thaniyar metriculation school kalil onrum sirappana education onrum illai,, pothumakkalukku onrum awarnees illai ,,,, pakkathu veettu pillai tie katti shoe pottuttu poratha parthuttu namma pullaiyum antha schoollil padikkanum appadinnu ninachuttu serkkiranga yearly government nirnayicha feesah vida 5madangu vangaranga
    ithila donation vera appara eppadi government schoolil teacher vacant vilukum vaippu cummynratha vida pallikalvi thirampada seyalpadavillai ithuthan unmai .........,,
    thaniyar pallikalukku mattume arasu matrum pallikalvi muluvathumana support seykirathu
    ethirvarum kalam arasu palliye irukkathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி